உலகம்

இலங்கையில் கொரோனாவுக்கு 27 வயது யுவதி பலி !

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில், அங்கு இறுதியாக மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு, மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த இரு ஆண்களும், இரு பெண்களும் நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, பொக்குனுவெட்ட பகுதியை சேர்ந்த 59 வயது பெண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

களுத்துறை, ஹல்தொட்டை பகுதியை சேர்ந்த 89 வயது ஆண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

Hot Topics

Related Articles