உலகம்

இரகசியமாக 2 ஆவது திருமணம் செய்துகொண்ட பிரபுதேவா… யார் அந்தப் பெண் தெரியுமா?

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா, இரகசியமாக 2 ஆவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சினிமாவில் நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றோர் நடித்த படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்தார்.


பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது.

நயன்தாராவை திருமணம் செய்ய முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். தற்போது பிரபுதேவாவுக்கு 47 வயது ஆகிறது.

குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர் உறவுக்கார பெண்ணை பிரபுதேவா 2 ஆவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி வைத்தியராக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை.

Hot Topics

Related Articles