உலகம்

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட வைத்தியர் – நிச்சயமாகியிருந்த பெண்ணுக்கு நடந்ததென்ன ?

பிரேசிலை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆடம்பர விடுதி ஒன்றில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலக மக்களிடையே பிரபமாகியுள்ளார்.

டியாகோவிருக்கும் விடோர் புவேனோ என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண நிச்சயம் ஆகி இருக்கிறது.

இவர்களுக்கு, ஜூலை மாதம் திருமணமாக இருந்த வேளையில் விடோர் புவேனோ திருமண நிச்சயத்தை ரத்து செய்து, டியாகோ உடன் பிரேக்- அப் செய்தார். இதற்கு காரணம் இவர்கள் பெரிய சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், என்ன பேச்சுவார்த்தை நடத்தியும் புவேனோ திருமண நிச்சயம் ரத்து தான் என உறுதியாக கூறியுள்ளார்.

அதற்கு, டியாகோ அனைவரும் திடுக்கிடும் வகையில் ஒரு முடிவு எடுத்தார். அதுதான் குறித்த நாளில் தன்னை தானே திருமணம் செய்துக் கொள்வது.

திருவாளர் டாக்டர் டியாகோ ரபாலோ கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஒரு ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் தனது உற்றார், உறவினர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இந்த விருந்தில் ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாஹியா எனும் இடத்தில இந்த திருமண விருந்து நடந்திருக்கிறது.

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட டியாகோ, தனது திருமண நாள் தான், தனது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் டியாகோ.

அந்த ஒரு பதிவில் தனது திருமணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தனது முன்னாள் காதலிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் டியாகோ.

அதில்,உன்னையும், உனது சுதந்திரத்தையும், நீ எடுத்த முடிவையும் மதிக்கிறேன், நீ எங்கே இருக்க விரும்புகிறாயோ, அங்கே மகிழ்ச்சியாக இரு என கூறி இருந்தார். இச்சம்பவமானது உலக மக்களிடையே பிரபலத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Hot Topics

Related Articles