உலகம்

இலங்கை விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக பெண் விமானிகள்

69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முன்முறையாக இன்றைய தினம் (16) பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சீன குடாவில் முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விமானி அதிகாரி A.D.P.L . குணரத்தன , விமானி அதிகாரி R. D .வீரவர்தன ஆகியோரே விமான படையின் முதல் பெண் விமானிகளாக இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles