உலகம்

ஆண் பாலியல் தொழிலாளர்களினால் ஆபத்தில் இலங்கை

இலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்களினால் எதிர்வரும் வாரங்களில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் தற்போது 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 4000 பேரும் 15 வயதுக்கும் குறைவான சுமார் 100 பேரும் எச்.ஐ.வி. அல்லது எயிட்ஸ் உடன் வாழும் நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 2000 பேர் வரையானோர் மட்டுமே சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளைகளில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் அதிகமாக சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் தங்களை ஊக்குவிக்கும் ஆண் பாலியல் தொழிளார்களின் காரணமாக எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் மூலம் பெரும்பாலான ஆண் இளைஞர் ஆண் பாலியல் தொழிலாளர்களை அணுகியுள்ளமை ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலையின் காரணமாக பெண் பாலியல் தொழிலாளர்களை தொடர்பு கொள்வதில் தொய்வு நிலை காணப்படுகின்றது. இதன் விளைவாக பெரும்பாலான இளைஞர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை தமது பாலியல் தேவைகளுக்காக நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles