உலகம்

Happy Diwali 2020 : தீபாவளி எண்ணெய் குளியல்.. நேரம், பலன்கள் முழு விபரம் !

உலக இந்துக்களால் நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவாளியாகக் கொண்டாடப்படுகிறது.

தசரா பண்டிகைக்கு 20 நாட்களுக்குப் பிறகு வரும் தீபாவளி, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.


தீபாவளி நாளில் இனிப்பு, புத்தாடைகள், அன்புக்குரியவர்களை வாழ்த்துவது என படு அமர்க்களமாக இருக்கும். இந்த நல்ல நாளில் செல்வ செழிப்போடு இருக்க, வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்துவிடும் என்றாலும், தங்கள் அன்புக்குரியவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவதை யாரும் தவறவிடக்கூடாது.

தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிராக போராடவும், நன்மையின் பாதையை பின்பற்றவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த நாள் உங்கள் வாழ்வை அமைதியுறச் செய்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்துடன் ஒளிரச் செய்யட்டும். அந்தவகையில் mininewshub.com தனது இணையவாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கு ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்றோம், நீங்கள் எப்போதும் செல்வத்தையும் வெற்றிகளையும் பெறுவீர்கள்.
சகல செல்வங்களையும் இந்த தீபாவளி உங்களுக்கு தரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்!

தீபாவளி எண்ணெய் குளியல்.. நேரம், பலன்கள் முழு விபரம்!

எண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகள் உண்டு.

தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.

diwali tamil diwali oil bath tamil
கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு. தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று அம்மாவாசை என்பதால் அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே எண்ணெய் தேய்த்து உடலில் எண்ணெய் ஊறிய பின்பு குளிக்க வேண்டும். நேரம் 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறந்தது.

மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது சூரிய ஒளி 30 நிமிடங்களாவது நமது உடலில் பட வேண்டும். வெயில் உள்ள நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்து குளிக்க வேண்டும்.சோப்பு பயன்படுத்த கூடாது. சீகைகாய், அரப்பு, பயித்த மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் குளியலின் மூலம் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறையும் ,உடல் அசதிகள் நீங்கும் இப்படி மேலும் பல நன்மைகளை அடையலாம் . ஆகையால் வருடத்தில் மற்றநாட்களில் எண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகளை பெறலாம்.

Hot Topics

Related Articles