உலகம்

8 குழந்தைகளை வைத்தியசாலையில் வைத்துக்கொன்ற தாதி கைது

இங்கிலாந்து வைத்தியசாலையில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக தாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30).

இந்த வைத்தியசாலையில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15 பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.


இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாதி லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.


இந்தநிலையில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக பொலிசார் தாதி லூசியை மீண்டும் கைது செய்துள்ளனர்.

தற்போது பொலிஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hot Topics

Related Articles