உலகம்

முதல்முறை கர்ப்பம்… கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?

முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்திய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது.


அதாவது கருவுறும் தொடக்க காலத்திலே, பிறக்கப்போகும் குழந்தையின் உணவுக்காக தாயின் மார்பகங்கள் பால் உற்பத்திக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுவிடும். அத்தகைய மாற்றங்கள் தாய்மையடைந்த ஆறாவது வாரத்திலேயே மார்பகங்களில் தென்படும். அப்போது மார்பகங்களுக்கு வரும் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து இரத்த நாளங்கள் புடைத்து எழுவதால் வலியும் தோன்றும்.

முழு சுரப்பியின் பரிமாணமும் அதன் வெளிப்புற நுண்ணறைகளில் தான் முதலில் வெளிப்படும். அப்போது மார்பகங்கள் கெட்டியாகவும், மேடான முனைப்புகளுடனும் காணப்படும். மெதுவாகத் தொட்டாலே வலிக்கும். இந்த நிலை கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தின் இறுதியில் தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை இருந்துகொண்டிருக்கும்.

மார்பகத்தின் வெளிப்புறத்தை மெதுவாக அழுத்தினால் மார்பகக் காம்பு வழியாக தெளிந்த கசிவு கொஞ்சமாக வெளிப்படும். சிலருக்கு தாமாகவேகூட வெளிப்படும். அது முதலில் மெல்லிய வைக்கோல் நிறத் திரவம் போலவும், பிறகு கெட்டியாகி அடர் மஞ்சள் நிறமாகவும் தோன்றும். 14 ஆவது வாரத்தில் மார்பகக் காம்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிறம்மாறும். கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகங்களில் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். அவை இயற்கையானவைதான்.

முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்திய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.

இயல்பான கர்ப்பமாக இருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. தாம்பத்தியம் கொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தாம்பத்தியத்தை தவிர்ப்பது நல்லது.

சிறிது இரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தாலோ, பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தாலோ, தாம்பத்தியத்தை தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் எப்போதுமே கர்ப்பிணியின் மனநிலை, உடல்நிலை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். கர்ப்பிணி விரும்பும்பட்சத்தில் பாதுகாப்பான ‘பொஷிஷனில்’ தாம்பத்தியத்தை அமைத்துக்கொள்ளலாம்.

முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் எழும். அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் மகப்பேறு வைத்தியரிடம் விளக்கம் கேட்டு விடைதேடிக்கொள்ளவேண்டும். அப்போது கர்ப்பகால தாம்பத்தியம் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டுத்தெரிந்துகொள்வது அவசியம்.

தற்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும், ‘தமக்கும் குழந்தையில்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ!’ என்று பயம்கொள்கிறார்கள்.

எந்த கருத்தடை முறையையும் கடைப்பிடிக்காமல் இயல்பாக தாம்பத்திய உறவு மேற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். முப்பது வயதுக்குமேல் ஆகி, கருத்தரிக்கக் காலதாமதமானால் விரைந்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

பொதுவாக திருமணமாகி ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 30 முதல் 35 வயதுக்கு இடையே கருத்தரிக்கும் வாய்ப்பு, அதற்கு முன் கருத்தரிப்பதில் இருந்த வாய்ப்பைவிட பெருமளவு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு விஷயம் என்னவென்றால், புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தரமான சினைமுட்டையும், ஆற்றல் மிகுந்த உயிரணுவும் தேவையாக இருக்கிறது. சினைமுட்டை முதிர்ந்து வெடித்து மாதந்தோறும் சினைப்பையில் இருந்து வெளியேறும். முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறே, உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம்வரை உயிருடன் இருக்கும். ஆகவே கருத்தரிக்க சிறந்த நேரம், முட்டை வெளியான காலத்தை சார்ந்தே இருக்கிறது.

Hot Topics

Related Articles