உலகம்

நக்கிள்ஸ் மலைத் தொடரில் சிக்கிய அரிய இன பாம்புகள்

இலங்கையின் நக்கிள்ஸ் மலைத் தொடரில் இரு அரிய இன பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பாம்புகளுக்கும் (aspidurai desilvai) மற்றும் (rhinophilis gunasekarai) என்று பெயரிடப்பட்டுள்ளன.


ஊர்வன , நீரியல் மற்றும் நீரியல்வாழ் உயிரின ஆய்வாளர் மெண்டிஸ் விக்ரமசிங்கவினால் இந்த இரு அரிய இன பாம்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்பிடுராய் டிசில்வாய் என்ற விஷமற்ற பாம்பினத்தை சார்ந்த இவை இலங்கையின் நக்கிள்ஸ் மலைத் தொடரில் மாத்திரமே வாழ்கின்றன.
இப் பாம்புகள் பகலில் நிலத்தடியில் வாழ்கின்ற அதேவேளை, அந்திமாலை பொழுதுகள் மற்றும் இரவுவேளைகளில் அவற்றின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படும்.

ஆஸ்பிடுராய் டிசில்வாய் என்ற இந்த பாம்பினமானது இன பெருக்கத்தில் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் இவை அழிந்து வரும் பாம்பினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை மற்ற இனமான, ரைனோபோலிஸ் குணசேகரய் அல்லது குணசேகரவின் மடிலா என்ற பாம்பிற்கு நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பங்களிப்பு செய்த இலங்கை சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவின் ஸ்தாபகர் சமந்தா குணசேகரவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்பாம்பினமானது நக்கிள்ஸ் மலைகளின் அண்மித்தத ரிவர்ஸ்டன் மலை பகுதிகளில் உயிர்வாழ்கின்றன.

இப்பாபினமானது ரைனோஃபிலிஸ் அல்லது தேரைகள் இனத்தைச் சேர்ந்தவையாக காணப்படும். அதேவேளை இப்பாம்பு முழுமையாக மண்ணுக்குள் வாழும் விசேட உயிரினமாகவே காணப்படுகின்றன.
விஷமற்ற மற்றுமொரு பாம்பினமான இவ்வகை பாம்புகள் பெரும்பாலும் இரவில் நிலத்தில் வீழ்ந்திருக்கும் காய்ந்த இலைகள் மற்றும் மரக்கட்டைகளில் மறைந்து புலுக்களை வேட்டையாடும்.

சூழலியல் மாற்றங்களுக்கு முக்கியத்துவமான இவ்விரு உயிரினங்களும் மனித செயற்பாடுகள் காரணமாக அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளது.

பல்லிகள் , பாம்பினங்கள் மற்றும் ஏனைய ஊர்வனங்கள் உட்பட புதிய அரிய வகை 30 க்கும் மேற்பட்ட உயிரினங்களை கண்டுப்பிடித்துள்ள ஆய்வாளர் மெண்டிஸ் விக்ரமசிங்க , பல வருடங்களாக அழிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பல உயிரினங்களை மீள் கண்டுப்பிடித்து சர்வதேச சமூகத்தின் நற்பெயரை பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles