நியூநிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை திகதியை தீர்மானிக்கவில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளன.
“எங்களுக்கு சில திட்டங்கள் உள்ளன – அவை ஏதோவொரு வழியில் உள்ளன,” எனவும் “நாங்கள் இன்னும் சில திட்டங்களை எங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும் எனவும் புதன்கிழமை நியூசிலாந்தின் நியூ பிளைமவுத் நகரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
40 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன் 44 வயதான தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டை கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு வயது மகள் உள்ளார்.
கடந்த மாதம், அவரின் தொழிற்கட்சி பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதில் இரண்டாவது முறையாகவும் நியூஸிலாந்தின் பிரதமராக பதவியேற்றார்.
ஜெசிந்தா கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகராமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு உலகளாவிய ரீதியில் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.