இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது.
இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 256 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் பேலியாகொடை மீன் சந்தையின் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மிகுதி 217 பேர் தொடர்புகளை பேணிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் மாத்திரம் 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று பரவியதில் இருந்து அடையாளம் காணப்பட்ட அதி கூடிய தொற்றாளர்கள் இதுவாகும்.
3 ஆயிரத்து 495 பேர் தற்போது தொடர்ந்தும் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 3 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.