கொரோனா தொற்று காரணமாக சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
அவர் கடந்த 51 நாட்களாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரழந்துள்ளார்.