உலகம்

இலங்கையின் “Best Corporate Website” விருதினை வென்ற Prime Group இன் இணையத்தளம்

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA [A] – Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10 ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது. இந்த வருடாந்த இணைய விருது வழங்கல் போட்டியில் கலந்து கொண்ட இக் குழுமம், “Best Corporate Website” பிரிவில் தங்க விருதினையும், ஒட்டு மொத்த பிரிவில் வெள்ளி விருதினையும் வென்றது.


தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் குழுமம் கொண்டுள்ள உறுதியான கவனத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.

Prime Group இணையத்தளமான www.primelands.lk, ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பிரிவில் வெள்ளி விருதினை வென்றதுடன், ‘Corporate’விருது பிரிவில் கிடைக்கப்பெற்ற 485 விண்ணப்பங்களை பின் தள்ளி தங்க விருதினையும் வென்றது. இந்த மாபெரும் வெற்றிக்கான காரணமாக Prime Group இன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குழுக்களின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சி மற்றும் இந்த இணையத்தளத்தை உருவாக்குவதில் பிரதானமாக செயற்பட்ட Lithium Technologies இன் நிபுணத்துவம் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றி தொடர்பில் Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் முன்னணி ஆதன அபிவிருத்தியாளர்களில் ஒன்று என்ற வகையில், ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், இந்த விருதுகளை வென்றுள்ளமை தொடர்பில் மிகுந்த பெருமையடைகின்றோம். ஒரு வணிகமாக நம்பகத்தன்மையை நிலைநாட்ட உயர் தர இணையக் கட்டமைப்பை கொண்டிருப்பது அவசியமானதென்பதுடன், முன்னரை விட தற்போது வாடிக்கையாளரை திருப்தியாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.


இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் பல டிஜிட்டல் அலைவரிசைகளுடன் Prime Group மிகவும் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தை எமது பிரதான நோக்காகக் கொண்டு, எங்கள் இணையத்தளமானது ஆதன தேடல்களை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் இணையத்தளத்துக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எங்கள் அணிகளின் கடமையுணர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் பொதுவாக குழுவின் எதிர்கால அணுகுமுறை ஆகியவை இந்த வெற்றியின் உந்து சக்திகளாக இருக்கின்றன, ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆட்களப் பதிவகம் (LK Domain Registry) வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இலங்கையின் ஒரேயொரு இணைய போட்டி நிகழ்வான BestWeb.lk, நிறுவனங்கள் தமது இணையத்தளத்தை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றது. தோற்றக் கவர்ச்சி, பயன்பாடு மற்றும் பிரபலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இலங்கை இணையத்தளங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதே இந்த போட்டியின் பிரதான நோக்கமாகும். இந்த ஆண்டு, போட்டியில் 485க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மதிப்புமிக்க விருதுகள் மற்றும் அங்கீகாரத்திற்காக போட்டியிட்டன.


BestWeb.lk 2020க்கான அனைத்து விண்ணப்பங்களும் – செயல்பாடு, வழிசெலுத்தல் இயலுமை, தரநிலைகள், செயல்திறன் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு, உள்ளடக்கம், ஊடாடும் திறன், தனியுரிமை, பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டன. நடுவர் குழுவில் மிகச் சிறந்த இணையத்தள நிபுணத்துவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.

Prime Group இணையத்தளமானது ‘Live Chat’ ஆதரவை வழங்குவதனால் வாடிக்கையாளர்களும், வருகை தருவோரும் விபரங்களைப் பெற்றுக்கொள்ள விற்பனை முகவர்களுடன் நிகழ் நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். அதிகமான ஒன்லைன் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களை விட ‘Live Chat’ ஐ விரும்புகின்றமையால், இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியத்தை வழங்குகின்றது.
எனினும், இந்த இணையத்தளத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், Property Virtual Tour Facility ஆகும். இது கொள்வனவு செய்ய விரும்புவோர் தமது வீட்டில் இருந்தவாறே ஆதனத்தை பார்வையிடக் கூடிய வாய்ப்பினை வழங்குகின்றது. கொவிட் – 19 தொற்றின் பின்னர் இது மிகவும் பயன்மிக்கதாக உள்ளதாகவும் நிரூபணமாகியுள்ளது.

Prime Group கடந்த 25 ஆண்டுகளாக எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், அதன் ஊழியர்களின் விசுவாசத்தையும் சரியாகப் பெறுகிறது.
இக் குழுமம் அதன் சகலதுறை மேன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்வதற்கான சிறந்த இடமாக (Great Place to Work) தெரிவு செய்யப்பட்டுள்ளது

மட்டுமன்றி ஆசியாவின் சிறந்த 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாக முடிசூட்டப்பட்டுள்ளதுடன், PropertyGuru Asia Property விருதுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் Best Developer ஆக தெரிவு செய்யப்பட்டது.

மேலும், இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் ICRA [A] – Stable மதிப்பீட்டைப் பெற்ற ஒரேயொரு ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். Prime Group பல ஆண்டுகளாக பல விதமான கௌரவங்களைப் பெற்றுள்ளது. மேலும் தெற்காசியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனமாக மாறுவதற்கான அதன் தொடர் முயற்சியுடன், பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குவதற்கான அதன் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பானது சந்தேகத்துக்கு இடமின்றி நீண்ட தூரம் பயணிக்கும்.

Hot Topics

Related Articles