உலகம்

பியகமவில் பாதுகாப்பாக மீள் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க அங்கர் அணி பாடசாலை மாணவர்களுக்கு உதவி

தொற்றுநோய் பரவுகின்ற காலகட்டத்தில் வாழ்க்கை என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் என இரு தரப்பினருக்குமே சவால் மிக்கது. பாடசாலை கற்றல் செற்பாடுகளை தற்போது மீள ஆரம்பித்துள்ளமை ஒரு முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க படியாகும், ஆனால் பிள்ளைகள் தங்கள் கற்றலை மீண்டும் தொடங்க பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வழிமுறைகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியம்.


பியகமவில் பாடசாலை மாணவர்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக தமது கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில்,

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முதன்மை பால் வர்த்தகநாமமான அங்கருக்குப் பொறுப்பான அணி சமீபத்தில் பியகம மத்திய கல்லூரி மற்றும் பியகம ஆரம்ப பாடசாலையின் மைதானங்கள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் ஒரு சிரமதான பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சி தொடர்பில் பியகம மத்திய கல்லூரியின் அதிபரான திரு. யு.வி. குணரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில்,


“தற்போது பரவி வருகின்ற தொற்றுநோய ; நம் அனைவருக்கும் முன்னெப்போதும் அனுபவிக்காத ஒரு சவாலாக இருக்கின்ற போதிலும், பற்றைகள், செடி கொடிகள் வளர்வதன் காரணமாக ஏற்படும் நுளம்பு பெருக்கம் போன்ற பிற ஆபத்துகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆபத்தைப் போக்க தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

“எங்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 2,000 இற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இந்த சூழலை பாதுகாப்பானதாகவும், சுத்தமாகவும் மாற்றும் முயற்சியில், உள்நாட்டு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கர் அணி ஒன்றிணைந்து பணியாற்றியமைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


இரு பாடசாலைகளிலும் தோட்டங்களையும் மைதானங்களையும் சுத்தம் செய்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட டிராக்டர் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்களுக்கான செலவை அங்கர் பொறுப்பேற்றுக் கொண்டது. வளாகத்தை சுத்திகரிக்க ஒரு கிருமிநாசினி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்கு பாடசாலைக்கு மீள வருகை தரும் போது பயன்படுத்தப்படுவதற்காக முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பு தெளிப்பான்களை நன்கொடையாகவும் அங்கர் அணி வழங்கியுள்ளது.

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வல்லுநர்களும் 10 ஆம் திகதி முதல் சுழற்சி அடிப்படையில் வருகை தரவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வார கால தொடர் பாதுகாப்பு விளக்கமளிப்பு அமர்வுகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Hot Topics

Related Articles