வருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்! ஏன்?

இலங்கையின் “Best Corporate Website” விருதினை வென்ற Prime Group இன் இணையத்தளம்

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA - Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10 ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க...

Huawei Announces New Developer Technologies Capable of Smarter All- Scenario Experiences

Huawei Developer Conference 2020 (Together) took place last week. In the keynote speech, Huawei announced major upcoming updates for HarmonyOS 2.0, EMUI 11, HMS(Huawei...

Lakwimana gives you the chance to surprise your loved ones with their favourite ‘Celfie’!

Having your favourite celebrity wishing you on your birthday is a truly delightful experience for anyone. Lakwimana launches the first ever Digital Gift ‘Celfie’...

உங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன

உங்களுக்கு பிடித்த பிரபலத்தை உங்கள் பிறந்தநாளில் நீங்கள் விரும்பியது போல் வாழ்த்து சொல்லி வீடியோ எடுத்து அனுப்புவது எந்தவொருவருக்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவமாகும். உங்கள் அன்புக்குரியவர்களை தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதன்...

வீதி விபத்தில் 6 மாதக் குழந்தை பரிதாபமாக பலி

புத்தளம் , பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் கொழும்பு...

தேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும்.

தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்ட ஒரு சில விடயங்கள் பல வருட காலமாக தொடர்ச்சியாக வருகின்றதை அவதானிக்கமுடியும். குறிப்பாக பெருந்தோட்டத்துறையை எடுத்துக்கொண்டால் காலம்காலமாக லயன் அறைகளில் வாழும் அந்த மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்படும்.அதில் அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதாக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை வழங்குவதாக பிரதான கட்சிகள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் அதனை இதுவரை நிறைவேற்றியுள்ளார்களா? இன்றும் மலையகத்தின் பல பகுதிகளில காணப்படும் ஆதி கால லயன் அறைகளும் வெடித்த சுவர்களும், மழை பெய்தால் ஒழுகும் கூரைகளும், சுகாதாரமற்ற மலசல கூடங்களும் அந்தக் கேள்விக்கான விடைகளாக உள்ளன.

வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட அதே லயன் கூரைகள் மற்றும் ஒரு லயன் குடியிருப்புக்கு பொதுவான ஒரு மலசலகூடம் என்ற அடிப்படையில் இன்னும் பல பகுதிகள் காணப்படுகின்றன. ஏன்?
எமது நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களின் வீடமைப்பு தொடர்பான குறிப்பிட்டுள்ளார்கள். இது 2015 மாத்திரமல்ல, ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தொடர்ச்சியாக வருகின்ற விடயம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து நோக்கினால் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சொந்தமான வீடு மற்றும் மலசலகூட வசதியை ஏற்படுத்தி தருவதாக அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளனர்.

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்து நோக்கினால் பெருந்தோட்ட மக்களுக்கு தற்போதைய லயன் முறையிலான வீடுகளை மாற்றியமைத்து அவர்களுக்கு ஒரு வீடும் வீட்டுடன் இணைந்த ஒரு காணியையும் வழங்குவதாக அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளனர்.

மலையகத்தில் குறிப்பாக பதுளை மாவட்டத்தில் எத்தனையோ பெருந்தோட்டப் பகுதிகள் இவை எவற்றையும் காணவில்லை. இப்போதும் லயன் அறைகளில்தான் வாழ்கிறார்கள். இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் எம்.சச்சிதானந்தனிடம் நாம் கேட்டபோது,

மலையக மக்களுடைய அதிகாரங்களை தக்க வைக்க வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கருத்தாக உள்ளது.  அதுதான் உறுதியான அத்திவாரம். அது இல்லாமல் நாம் எவ்வளவு செய்ய நினைத்தாலும் செய்யமுடிவதில்லை. அரசு சார்ந்து செயற்படுபவர்கள் அந்த அத்திவாரத்தில் கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் கூறினார்.

மற்றைய பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தொடர்புகொள்ள பல முறை முயற்சித்த போதும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதால் நேரம் ஒதுக்கமுடியவில்லை என்கின்றனர்.

அரசியல்வாதிகளின் தேர்தல்கால விஞ்ஞாபனம் மாற்றமின்றி தொடர்வதற்கு காரணம் என்ன? மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களிடம் கேட்டபோது “இது மிக நீண்ட காலமாக இடம்பெறுகின்ற நிகழ்ச்சி.


இதற்கு முக்கியமான காரணம் பெருந்தோட்டங்கள் என்பது கிராமிய அமைப்புகளிலிருந்து முழுமையாக வேறுபட்ட ஒரு நிர்வாக அமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. பெருந்தோட்டங்களில் நடைபெறுகின்ற எல்லா திட்டங்களும் பெருந்தோட்ட முகாமைத்துவ அதிகாரிகள் அல்லது அதனுடைய கம்பெனிகளின் செயற்பாடுகளாக இருக்க வேண்டுமேயன்றி தேசிய நலத்திட்டங்கள் எதுவுமே பெருந்தோட்டங்களுக்கு  வருவதில்லை. வருவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

பெருந்தோட்டங்கள் என்பன தொழிற்சங்கங்களின் கீழ் தொழிற் சட்டங்களின் கீழ் இயங்குகின்ற ஒரு அமைப்பாகும். அங்கு வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கான நலன்கள் யாவும் தொழிற்சங்க சட்ட அடிப்படையில் தோட்டவேலை வழங்குபவர்கள் அல்லது கம்பெனிகள் தான் அதனை வழங்க வேண்டும். அவர்களுடைய சுகாதார மேம்பாடு, அமைப்பது அவர்களுக்கு வேறு வருமான வாய்ப்புகளை ஏற்படுத்துவது என எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அதிகாரமுள்ள ஒரு நிறுவனமாக பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்டத்தில் அதன் முகாமையாளரின் கீழ் சகல  திட்டங்களும் நடைபெற வேண்டுமே தவிர வெளியில் காணப்படுகின்ற திட்டங்களை  பெருந்தோட்டங்களில் செயற்படுத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.” என்கிறார்.

ஆனாலும் அரசின் அறிவுறுத்தல் கட்டளைகளுக்கு பெருந்தோட்ட கம்பனிகள் கட்டுப்பட்டவையே. அதன் அடிப்படையில் செயற்படுத்த முடியாதவையா என்பது கேள்வியே. “உலக நாடுகளில் எடுத்துப் பார்த்தால் நகரம் கிராமம் என்று இரண்டு துறைதான் காணப்படும. இலங்கையில் நகரங்கள், கிராமங்கள் மட்டுமல்லாமல் பெருந்தோட்டத்துறை என்பது தனியாகவே காணப்படுகிறது. அதற்கு வரைவிலக்கணம் உண்டு.

அதாவது 20 ஏக்கர் காணியில் 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலைக்கு அமர்த்தக்கூடிய ஒரு நடவடிக்கை பெருந்தோட்டங்களில் காணப்படுகின்றது. பெருந்தோட்ட தொழிற்சங்க அடிப்படை கட்டளையின் கீழ் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர் இடையிலான ஒரு உடன்பாடு நூற்றாண்டு காலமாக தொடர்கின்றது.

1927இல் இருந்து இன்றுவரை இந்த ஏற்பாடுகள் இருப்பதன் காரணமாக தேசிய நலத்திட்டங்கள் பெருந்தோட்டங்களில் வருவதற்கு சாத்தியமே இல்லை. பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் இன்னும் பழைய நிலையிலேயே உள்ளன. காரணம் உதாரணமாக ஒரு நூலகத்தை தோட்டத்தில் கட்ட வேண்டுமாயின் அதற்கு தோட்ட அதிகாரி சம்மதிக்க வேண்டும். அதற்கான காணியை வழங்கவேண்டும். கிராமத்தில் மாற்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.

ஆனால் பெருந்தோட்டத்துறையில் தேயிலையை தவிர வேறு எதையுமே நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது” என்றார்.
பெருந்தோட்டத்துறைகளில் இவ்வாறான ஒரு கட்டமைப்பு  காணப்படுகின்ற நிலையில், அரசியல்வாதிகள்  எந்த அடிப்படையில் வாக்குறுதிகளை வழங்குகின்றனர? எனக் கேட்டபோது ‘’மக்கள் பிரதிநிதிகள் இவற்றை செய்து தருவோம் என்று ஏமாற்றுகின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை ஒருவரும் சொல்வதில்லை. பெருந்தோட்டங்களில் தாம் கூறும் திட்டங்களை செயற்படுத்த முடியாதென அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் ஏதாவது செய்யலாம என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது” என்றார்.

அப்படியாயின் அரசாங்கத்தின் எந்த நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வாய்ப்பில்லையா? என கேட்டபோதுரூபவ் கடந்த காலங்களில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி சில அமைச்சர்கள் தோட்டங்களில் வீதிகளை அமைத்தனர்.  இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டங்களில் சமூக அபிவிருத்திக்கு எந்த ஏற்பாடுகளும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் பெருந்தோட்டங்கள் 1992 ஆம் ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்ட நேரம் ஒரு ஏற்பாடு செய்தார்கள்.

அதாவது பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுக்கு மாத்திரம் சில அபிவிருத்தி வேலைகளை செய்ய அதிகாரம் உண்டு. கடன் வழங்குதல்ரூபவ் வீடமைக்க காணிகளை அடையாளப்படுத்தல்ரூபவ் சுகாதார நலன்கள்ரூபவ் பயிற்சிநெறிகள் ஆகியவற்றை செயற்படுத்த அதிகாரம் உ;ணடு. ஆனால் தேசிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த எந்த அதிகாரமும் இல்லை. பெருந்தோட்டங்களின் வீடமைக்கும் அதிகாரம் இவர்களிடம்தான் உண்டு. தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் எதுவுமே இல்லை. இதை எல்லாருமே நன்கு அறிவார்கள் என்றார்.

அப்படியாயின் இதற்கு என்ன தீர்வென பேராசிரியரிடமே கேட்டோம். ‘’பெருந்தோட்டங்களை புதிய கிராமங்களாக மாற்றியமைக்க வேண்டும். 1877ஆம் ஆண்டுக இறுதியாக லயன் அறை கடட்டப்பட்டது. 160000 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்னும் அந்த லயன் அறைகளில் வாழ்கின்றனர்.  23,000 பேருக்கு மாத்திரமே தனி வீடு கட்டப்பட்டது. ஆனால் அவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. ஆயிரம் பேருக்கு தான் தனி வீடு கட்டப்பட்டது அவர்களுக்கு இன்னும் காணி உரிமை பத்திரம் வழங்கப்படவில்லை. காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாத 35000 குடும்பங்களை நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தினால் கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு மக்கள் கடன்பெற்றனர். சுமார் 20,25 வருடங்களாக அந்த கடனை கட்டி முடித்த பின்னரும், அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுதான் தோட்டத்தில் காணப்படும் நிலைமை. ஆக குறைந்தபட்சம் இவர்களுக்கு காணி உறுதிப்பத்தரத்தை வழங்கினால் அது பெரிய விடயம். தோட்டங்களில் நாம் எதனையும் செய்ய முடியாது. காரணம் எதுவும் எமக்கு சொந்தமல்ல. சுருக்கமாகச் சொன்னால்ரூபவ் தோட்டத்தில் வாழும் மா மரத்தில் காய்க்கும் பழங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  அந்த மா மரம் எமக்குச் சொந்தமில்லை’ என்றார்.

பெருந்தோட்டத் துறை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அங்கு எவ்வித அபிவிருத்திக்கும் சாத்தியமில்லை என்கின்ற தெளிவான விடயம் காணப்படுகின்ற போது, தேர்தல் விஞ்ஞாபனங்களில் காலாகாலமாக குறிப்பிடப்பட்டு வரும் வாக்குறுதிகள் எதற்காக?

“தோட்ட நிர்வாகம்தான் தோட்டப்பகுதிகளில் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற விடயம் அரசியல்வாதிகளுக்கே தெரிவதில்லை” என நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கூறினார்.


முதலாளிமார் சம்மேளம் கைகளிலேயே பெருந்தோட்டம் தொடர்பான விடயங்கள் உள்ளன. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை பெருந்தோட்ட முதலாளிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னரே தீர்வை பெறலாம்.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு கடந்த காலத்தில் கோரியிருந்தேன். அப்போது எமது மக்களின் பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்படும். அதன் அடிப்படையிலேயே எமக்கான தீர்வுகளை பெறலாம். வீதி அபிவிருத்தி, வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல விடயங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பல பிரேரணைகளை முன்வைத்தேன். உதாரணமாக மலையகத்தில் வீதிகள் திருத்தப்படாமல் உள்ளன. அதனை வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரகடனப்படுத்தி ஏற்காதவரை இன்னும் 200 வருட காலத்திற்கு இந்த விஞ்ஞாபனங்கள் அப்படியே தான் இருக்கும். எவ்வளவு நிதி ஒதுக்கினாலும், ஆயிரம் கம்பெரலிய திட்டங்கள் வந்தாலும் அதனை செய்ய முடியாது.

அரச கட்டளையில் எமது பிரச்சினைகள் இல்லை. அவை பெருந்தோட்ட கட்டளைகளிலேயே உள்ளன. அதனை அரச கட்டளைக்கு கொண்டுவரும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரித்து, எமது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி அதனூடாக மாத்திரமே தீர்வை பெறலாம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் திட்டவட்டமாக கூறினார்.

ஆக, தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்றும் அரசியல்வாதிகளின் நோக்கம் தொடர்பாகவும் அதன் பின்னணியில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டிய கட்டம் இதுவாகும்.
தேர்தல் விஞ்ஞாபனம், மக்கள், பெருந்தோட்டம், வாக்கு

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

Hot Topics

இலங்கையின் “Best Corporate Website” விருதினை வென்ற Prime Group இன் இணையத்தளம்

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA - Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10 ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க...

Huawei Announces New Developer Technologies Capable of Smarter All- Scenario Experiences

Huawei Developer Conference 2020 (Together) took place last week. In the keynote speech, Huawei announced major upcoming updates for HarmonyOS 2.0, EMUI 11, HMS(Huawei...

Lakwimana gives you the chance to surprise your loved ones with their favourite ‘Celfie’!

Having your favourite celebrity wishing you on your birthday is a truly delightful experience for anyone. Lakwimana launches the first ever Digital Gift ‘Celfie’...

Related Articles

இலங்கையின் “Best Corporate Website” விருதினை வென்ற Prime Group இன் இணையத்தளம்

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA - Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10 ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க...

Huawei Announces New Developer Technologies Capable of Smarter All- Scenario Experiences

Huawei Developer Conference 2020 (Together) took place last week. In the keynote speech, Huawei announced major upcoming updates for HarmonyOS 2.0, EMUI 11, HMS(Huawei...

Lakwimana gives you the chance to surprise your loved ones with their favourite ‘Celfie’!

Having your favourite celebrity wishing you on your birthday is a truly delightful experience for anyone. Lakwimana launches the first ever Digital Gift ‘Celfie’...