உலகம்

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை. 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள், நாட்பட்ட ஏனைய நோயுடன் போராடி வருபவர்கள். ஆகியோர்களே அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, இயல்பான அளவைவிட மிக குறைவாக இருப்பதுதான் உயிரிழப்பிற்கு மிக முக்கிய காரணம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி போன்ற பிரச்சனை இருக்கலாம். அத்துடன் இத்தகைய தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கும் தருணத்தில், இவர்களின் உடலுக்குள் செல்லும் ஓட்சிஜன் அளவும் குறைந்துவிடுகிறது. பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் 97 முதல் 100 சதவீத அளவில் ஓட்சிஜன் உடலுக்குள் செல்கிறது.

ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுக்குள் செல்லும் ஓட்ஸிஜனின் அளவு முப்பது சதவீதம் முதல் எழுபது சதவீதமாக குறைய ஆரம்பித்து விடுகிறது. இதன் காரணமாக நாட்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

அத்துடன் உடலில் ஏற்கனவே உள்ள சில பாதிப்புகளால், உயிரிழைப்பையும் எதிர்கொள்கிறார்கள். அதனால் பாதிப்பு ஏற்பட்ட முதியவர்கள், சளி மற்றும் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்திய சாலைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க விரும்புபவர்கள், தங்களுடைய இல்லங்களில் finger pulse oximeter என்று கருவியை பயன்படுத்தி, ஓட்சிஜனின் அளவை அவதானிக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் மாறுபாடு இருந்தால்.

உடனடியாக வைத்தியரிடம் தெரிவித்து, அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறவேண்டும். இவற்றில் அலட்சியம் காட்டினால் ஆபத்து ஏற்படும். அதே தருணத்தில் வீட்டில் இருக்கும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், குருதி அழுத்த நோயாளிகள்.

இவர்களெல்லாம் மருத்துவர்கள் வழங்கியிருக்கும் வழக்கமான மாத்திரைகளுடன், அவர்களின் ஆலோசனை பெற்று நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளையும், கபசுர குடிநீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்வது நல்லது.

 

Hot Topics

Related Articles