உலகம்

கொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி

ரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே இத்தகைய ஆடை அணிந்து பணியாற்றியுள்ளார்.

இவர் ஆண்களுக்கான தனி விடுதி ஒன்றில் பணியாற்றுகிறார். 20- 30 வயதுக்கிடைப்பட்டவர் எனக் கூறப்படும் இந்த தாதியின் பெயர் வெளியிடப்படவில்லை.

இவர் நீச்சலுடைக்கு மேலாக, கொரோனா தொற்று பரவாமலிருப்பதறகு வைத்தியர்கள் , தாதியர்களுக்கான பிரத்தியேக பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிந்திருந்தார். தாதியருக்கான வழக்கமான சீருடையை அணிந்திருவில்லை.

இதனால், ஒளி ஊடுருவக்கூடிய ஆடைக்கு ஊடாக தாதியின் உடல் அப்பட்டமாக தெரிந்தது.

இந்த ஆடையுடன் மேற்படி தாதி வைத்தியசாலையில் பணியாற்றும் படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால், தான் அணிந்திருந்து உள்ளாடை அல்ல எனவும் நீச்சலுடைகளையே அணிந்திருந்ததாகவும் தனது மேலதிகாரிகளிடம் அத்தாதி தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக பிரத்தியேக பாதுகாப்பு உபகரணங்களுடன் தாதியருக்கான ஆடையை அணியவில்லை எனவும், தான் அணிந்த பிரத்தியேக பாதுகாப்பு உபகரணம் ஷீ த்ரூ தன்மையானதாக இருந்ததை தான் உணர்ந்திருக்கவில்லை எனவும் அவர்கூறியுள்ளார்.

Hot Topics

Related Articles