உலகம்

மொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo

அழகான புகைப்படங்கள் முதல் நேர்த்தியான விளம்பர பிரசாரங்கள் வரை அனைத்திலும் ஸ்மார்ட்போன் புகைப்படக்கலை கடந்த சில வருடங்களில்
துரிதமாக முன்னேற்றமடைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தக நாமமான vivo, மொபைல் புகைப்படக்கலையில் புரட்சியை ஏற்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட V17 Pro மற்றும் S1 Pro ஆகியவற்றின் கெமரா தொழில்நுட்பங்கள் இதற்கு சான்றாகத் திகழ்கின்றன.


மொபைல் புகைப்படக்கலை இனி வெறுமனே உணவுகளை படமெடுப்பது மற்றும் செல்பிகளுக்கு மட்டுமானதல்ல, ஸ்மார்ட்போன் புகைப்படக்கலை
உங்களைச் சூழவுள்ள உலகத்தை படமெடுப்பதற்கான சிறந்த வழியாகும்.

இந்த நாட்களில், தொழில்ரீதியான புகைப்படக்கலைஞர்கள் கூட
படம்பிடிப்பதற்கு தங்களது ஸ்மார்ட்போன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். vivo Mobile Lanka, எப்போதும் நுகர்வோரின் தேவையை பூர்த்தி
செய்து வரும் மொபைல் தயாரிப்பு நிறுவனமென்பதுடன், vivo மொபைல் பாவனையாளர்களின் புகைப்பட திறன்களை மேம்படுத்துவதற்கும்,
ஊக்குவிப்பதற்கும் அவர்களின் ஸ்மார்ட் சாதனங்களின் புத்துருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் பாவனையாளர்கள் கட்டாயமாக தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், #vivography பேஸ்புக் குழுவில் அவர்கள் தமது மொபைல் புகைப்படங்களை பகிர்வதற்கு வாய்ப்பளிப்பதுடன், vivo ஸ்மார்ட் சாதனம் மூலம் படம் பிடிக்கப்பட்டவற்றை பாவனையாளர்கள் காட்சிப்படுத்துவதற்கான ஒன்லைன் தளத்தையும் வழங்குகிறது.

எதிர்காலத்தில், இந்த #vivographers இற்கான பல திறன் மேம்பாட்டு
பிரசாரங்களை முன்னெடுக்க நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
‘ஸ்மார்ட்போன்கள் முன்னர் எப்போதும் விட பிரபலமாக உள்ளதுடன், பலர் தங்கள் விடுமுறை நாட்களை படமெடுத்து, ஆல்பங்களில் நிறைப்பதற்கு இவற்றுக்கு மாறி வருகின்றனர். உங்கள் சிறந்த கெமரா எப்போதும் உங்களுடன் இருப்பதாகும், இது உங்கள் பாக்கெட்டில் வைக்கக்கூடியதுடன், இலகுவானதாகும். எங்கள் கெமரா அமைப்புகளின் அடிப்படையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நுகர்வோருக்கு புத்துருவாக்கம் நிறைந்த ஆச்சரியங்களை வழங்குவதற்கான பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்.

ஒவ்வொரு காட்சிகளிலிருந்தும் சிறந்த ஒளி, நிறம் மற்றும் விவரங்களை
பிரித்தெடுக்க கணிதத்தையும், அறிவியலையும் சார்ந்திருக்கும் மென்பொருள் படிமுறைத் தீர்வுகளுடன் சிக்கலான ஒளியியல் மற்றும் சென்சர்களை இணைக்கும் துறையில் முன்னணி வகிக்கும் கெமராக்களைக் கொண்ட சாதனங்களை நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளோம்” என Vivo Mobile Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கெவின் ஜியாங் தெரிவித்தார்.


புகைப்படக்கலை எழுச்சிக்கு காரணமான ஸ்மார்ட்போன்கள்
InfoTrends இன் மதிப்பீடுகளின் படி, உலகளவில் 1.2 டிரில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் புகைப்படங்கள் எடுக்கப்படும், இது பூமியில்
வசிக்கும் சுமார் 7.5 பில்லியன் மக்களில் ஒவ்வொருவருக்கும் சுமார் 160 படங்களாகும். எடுக்கப்பட்ட அனைத்து படங்களிலும் கிட்டத்தட்ட 85
சதவீதம் ஸ்மார்ட்போன்களில் பிடிக்கப்படும்.

தலைமுறை Z : புகைப்படக்கலை நுகர்வோரின் முக்கியமான குழு
Keypoint Intelligence இன் ஆராய்ச்சியின் பிரகாரம், தலைமுறை Z இல் பதிலளித்தவர்களில் 80% பேர் ஸ்மார்ட்போனே தங்களது முதன்மை
கெமரா என்று கூறியுள்ளனர்.

தலைமுறை Z குழுவில் சுமார் 45% தங்களை ஒரு snapshot புகைப்படக்கலைஞராக கருதுகின்றனர். அல்லது அந்தந்த
நேரத்தில் மாத்திரம் வேடிக்கைக்காக புகைப்படங்களை எடுப்பவர்கள். உங்கள் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களைக் கிளிக் செய்து அவற்றை
உடனடியாக உங்கள் சமூகவலையமைப்பு கணக்குகளில் பகிர்வது மிகவும் வசதியானது என்பதை vivoவில் நாம் எப்போதும் உறுதி செய்துள்ளோம்.
இதன் காரணமாகவே மொபைல் புகைப்படக்கலையில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்ட ஸ்மார்ட் சாதனங்கள் மீது நாம் கவனம்
செலுத்துகின்றோம், என ஜியாங் குறிப்பிட்டார்.

vivo அண்மையில் vivo S1 Pro மற்றும் V17 Pro ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்த இரண்டு சாதனங்களும் அதி நவீன கமெரா அமைப்புகளைக் கொண்டது. vivo S1 Pro நான்கு கெமெராக்களைக் கொண்ட அமைப்புடன் கூடியதுடன், f/1.8 வில்லையுடன் கூடிய 49 மெகாபிக்சல் பிரதான சென்சர், f/2.2 wide-angle வில்லையுடன் கூடிய 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சர், f/2.4 வில்லையுடன் கூடிய 2
மெகாபிச்சல் மூன்றாவது சென்சரையும் கொண்டது. இதன் 32 மெகாபிக்சல் AI ஸெல்பி கெமராவானது f/2.0 வில்லையைக் கொண்டது.

இதற்கு மேலதிகமாக, முதற்தர சாதனமான vivo V17 முன்னதாக 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முதல் 32MP dual elevating முன்
கெமரா, அதனோடு FHD மற்றும் Super AMOLED Ultra FullView™ திரை, தொழில்சார் தர 48MP AI Quad கெமரா ஆகிய சிறப்பம்சங்களை
உள்ளடக்கியது. வாடிக்கையாளர்கள் குறைந்த வெளிச்சத்திலும், தெளிவான செல்பிகளை எடுக்க முடியும். இதன் 48 MP பிரதான கெமெரா மற்றும் 13
MP telephoto sensors சென்சர்கள் , அதன் மேம்படுத்தப்பட்ட HDR, exposure மற்றும் சரியான நிறங்கள் என உயர்தர புகைப்படக்கலையை
வழங்குகின்றது. புத்துருவாக்கம் vivo வின் முக்கிய பெறுமானங்களில் ஒன்றென்பதுடன், உங்கள் கெமரா அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு
கொண்டு செல்லும் பொருட்டு V தொடரில் புதிய மாதிரியை விரைவில் அறிமுகப்படுத்தும்.

இலங்கையில் உள்ள தொழில்ரீதியான புகைப்படக்கலைஞரான பிரியந்த பண்டார ஏற்கனவே தனது vivo S1 Pro வின் புரட்சிகர vivo கெமரா
அமைப்பு தொடர்பில் அனுபவம் கொண்டவர்.

ஒரு பயண மற்றும் இயற்கை நிலக்காட்சி புகைப்படக்கலைஞராக இருப்பதால், நான் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதோடு, எனது மூன்றாவது கண்ணால் படம்பிடிக்க விரும்பும் பல கூறுகளை நான் எப்போதும் காண்கிறேன். என் கண்களைக் கவருபவை தற்செயலான மற்றும்  தன்னிச்சையான நிகழ்வுகளாகும். எனது vivo S1 Pro எப்போதும் என்னுடன் இருப்பதுடன், எனது ஏனைய பாரமான உபகரணங்கள் போல்
இல்லாமல், கையாள இலகுவானது. எனது vivo S1 Pro வினால் படமொன்றை எடுக்கும் போது அதனை உடனடியாக எடிட் செய்து என்
நண்பர்களோடு உடனடியாக ஒன்லைனில் பகிர இது உதவுகின்றது. இது மிகவும் நெகிழ்வு தன்மைமிக்கது.

ஏனெனில், அதிகமான நேரங்களில் நான் ஏனைய கெமராக்களில் படம்பிடிக்கும் போது, அதன் பின்னரான செயன்முறைப்படுத்தல் செயற்பாடுகளில் ஆர்வத்தை இழப்பதுண்டு. vivo S1 Pro வை பயன்படுத்துவது எனது புகைப்படக்கலையின் முற்றிலும் மாறுபட்ட பக்கத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளதுடன், இதன் மூலம் எனது சொந்த
பாணியிலான மொபைல் புகைப்படத்தை நான் உருவாக்கியுள்ளேன்," என பிரியந்த பண்டார தெரிவிக்கின்றார்.

vivo

vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில்
திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது.

vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது.

வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen,
Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan,
Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

பிரியந்த பண்டார

பிரியந்த பண்டார ஒரு தொழில்சார் புகைப்படக்கலைஞர் என்பதுடன், தரைத்தோற்றம், பயணங்கள் மற்றும் கட்டிடக்கலை புகைப்படக்கலையில்
சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அவரது புகைப்படங்களானது அவற்றின் நவநாகரிக தனித்துவம், சிறு விபரங்கள் மீதான கவனம் மற்றும் வணிக – கலை ரீதியான பெறுமானங்களின் தனித்துவமான கலவைக்காக பாராட்டப்படுகின்றன. பல உள்ளூர் மற்றும் சர்வதேச திட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட புகைப்படக்கலைஞராக அவர் இத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2016 ஆம் ஆண்டில் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒன்லைன் பத்திரிகையான Top Tenyயில் 10 சிறந்த பயண புகைப்படக்கலைஞர்களின் பட்டியலில் அவர் உள்ளடக்கப்பட்டிருந்தார். மேலும் இங்கிலாந்தின் சொகுசு குரூஸ் ஏஜென்சியான ROL, 2017 ஆம் ஆண்டின் சிறந்த பயண புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக பிரியந்த பண்டாராவை பட்டியலிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Hot Topics

Related Articles