உலகம்

சோசலிச இளைஞர் சங்கத்தால் பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு !

இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு மேலும் ஒருதொகுதி ஊடகவியலாளர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு உடைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு உடைகள் ஒரு தொகுதியை, இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் சோசலிச இளைஞர் சங்கம் வழங்கியுள்ளது.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர இதனை இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் கையளித்தார்.
Tamil arts & media school நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் கார்மேகம் இவற்றை எமது ஒன்றியத்திற்கு பெற்றுக் கொடுத்தார்.
விரைவில் இவை வெளிமாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles