இஸ்ரேலுக்கான 58 வயதுடைய சீனத் தூதுவர் டூ வேய் டெல் அவீவிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டூ வேய் அவரது படுக்கையில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம் எதுவென இதுவரை தெரியவில்லை.
உக்ரேய்னுக்கான சீனத் தூதுவராக பணியாற்றியிருந்த டூ வேய் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமணமான தூதுவருக்கு ஒரு மகன் உள்ள போதும் அவரது குடும்பம் இஸ்ரேலில் அவரோடு கூட இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.