உலகம்

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உதவி

கொழும்பு ஆமர்வீதி, பரடைஸ் பார்க் பகுதியில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உலருணவு பொருட்களை வழங்கியது.


தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று (08.05.2020) இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

 

ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் பேரில், சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் குறித்த உலருணவுப் பொதிகளை எமது ஒன்றியத்தின் ஊடாக வழங்கினார்.


குறித்த பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது இம்மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

 


ஊடகவியலாளர்களின் மேம்பாட்டை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம், நிறுவனம் சார்ந்து செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உதவிகளை பெற்றுக்கொடுக்கும்.

அத்தோடு, சமூக சேவையிலும் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles