உலகம்

கத்தான்குடியில் சஹ்ரான் பெண்கள் குழுவுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் விடுதி சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாதி சஹ்ரான் பெண்கள் குழுவினருக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்பட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


காத்தான்குடி பாலமுனைப் பிரதேசததில் , கடற்கரையை அண்டிய கிராமமான கர்பலா பகுதியில் உள்ள விடுதியொன்றே இவ்வாறு சி. ஐ. டி. மற்றும் விசேட அதிரடிப்படை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

சஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு இவ்விடுதியில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கைதான பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடத்தப்படுவதாக சி ஐ டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பிலிருந்து காத்தான்குடி சென்ற விசேட பொலிஸ் குழுவொன்றும் இத்தேடுதல் நடவ‍டிக்கையில ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles