உலகம்

அனைவரும் வீட்டில் இருப்பதால் இறுதி அரிய சந்தர்ப்பத்தை தவறவீடாதீர்கள் !

இந்த ஆண்டின் நான்காவது மற்றும் இறுதி ‘சூப்பர் பிளவர் மூன்’ நிகழ்வை மக்கள் காணும் வாய்ப்பு உள்ளது.

இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக அவதானிக்க முடியும். சந்திரன், தன் சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம் செல்வது, ‘அபோஜி’ என, அழைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து சந்திரன், பல இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும். இந்நிலையில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவது, ‘பெரிஜி’ என, அழைக்கப்படுகிறது. இந்த தருணத்தில், பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான துாரம், குறைவாக காணப்படுகின்றது.

இந்த “பெரிஜி, பூமிக்கு நெருக்கத்தில் வரும் போது, ‘சூப்பர் மூன்’ என, அழைக்கப்படுகிறது. இந்த மாதம், ‘பெரிஜி சூப்பர் பிளவர் மூன்’ என்ற, வானியல் நிகழ்வை இன்று கண்டுகளிக்கலாம்.

ஒரு நீள் வட்டப் பாதையில், பூமியை சுற்றி வரும் சந்திரன், 27 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். பௌர்ணமி தினத்தில் நடக்கும் இந்த நிகழ்வு, ‘சூப்பர் மூன், பெரிஜி புளூ மூன்’ என, அழைக்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களாகவே, ‘பெரிஜி புளூ மூன்’ நிகழ்வு நடந்து வருகிறது. ஆண்டின் நான்காவது, கடைசி நிகழ்வு இன்று இடம்பெறுகிறது.

இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு முறையும், ஒரு பெயர் வைக்கப்படுகிறது. இன்று நடக்கும் நிகழ்விற்கு, ‘சூப்பர் பிளவர் மூன்’ என, பெயரிடப்பட்டுள்ளது. இதை, மக்கள் சாதாரணமாக பார்வையிட முடியும்.

Hot Topics

Related Articles