உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) தீர்வு வழங்குனரான Huawei, பல வகையான அதிநவீன ஐ.சி.டி தீர்வுகளை நன்கொடையாக வழங்கியதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், தனது முயற்சி நடவடிக்கைகளையும் அதிகரித்தது.
அந்த வகையில், தனி நபர்களுக்கிடையிலான தொடர்புகளை குறைப்பதன் மூலம் குறைந்த ஆபத்துடன் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அரச துறைக்கு உதவும் பொருட்டு 5 Huawei high definition video conference அமைப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், இந்த நன்கொடைகள் 6 high precision thermal கமெராக்களையும் உள்ளடக்கியிருந்ததுடன், உயர் துல்லிய தரத்தில் சாத்தியமான ஆபத்துக்களை கண்டறிய விரைவாக உதவும் பொருட்டு முக்கிய இடங்களில் இவை பொருத்தப்படவுள்ளன. இந்த ஐ.சி.டி உபகரணங்களின் மொத்த பெறுமதி சுமார் ரூபா.50 மில்லியன் ஆகும்.
“இத் தருணத்தில் நம் அனைவரினதும் பொது எதிரி கொரோனா வைரஸாகும் என்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையை பராமரிக்க அரசாங்கம் தனது பொறுப்பை மனப்பூர்வமாக நிறைவேற்றுகிறது.
வாழ்க்கைக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், அனைத்து துறைகளிலிருந்துமான முயற்சிகளுடன், நாம் எவ்வாறு இதை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதாகும்,” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்த சவால் மிக்க நேரத்தில் ஐ.சி.டி துறை அவர்களின் தனித்துவமான பெறுமானங்களுடன் பங்களிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் அரச துறைக்கு தொலைதூர தொடர்பாடல் செயல்திறனை மேம்படுத்த அதி நவீன தொழில்நுட்ப தீர்வுகளுடன் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட எமக்கு உதவுவதற்கு, Huawei அளித்த இந் நேரத்துக்கு தேவையான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
எதிர்காலத்தில் Huawei போன்ற ஐ.சி.டி நிறுவனங்கள், முழு தேசத்துடனும் இணைந்து, நம் நாட்டில் டிஜிட்டல் பரிமாண வளர்ச்சியை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதுடன், நம் மக்களின் செழுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
“இலங்கை மக்கள் மற்றும் தேசத்தின் சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட கடுமையான சுகாதார உத்தரவுகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான மற்றும் நேரத்துக்கேற்ற நடவடிக்கைகள் உட்பட, அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமை இந்தச் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கு வழி வகுத்ததுடன், வரலாற்றில் இது போன்ற பலவற்றிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளோம், என அவர் குறிப்பிட்டார்.
“5G, IoT, AI, மற்றும் cloud போன்ற வளர்ந்து வரும் ஐ.சி.டி தொழில்நுட்பங்கள் இந்தச் சூழ்நிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தொற்றுநோய் போரில் வெற்றிபெற இந்த அழகிய தீவுக்கு உதவுவதற்கும், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொண்டுவருவதற்கும் இலங்கைக்கு உதவுவதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்களுடன் Huawei தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும்,”
என Huawei Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரியான லியாங் யி தெரிவித்தார். அவசரகால நிலையின் போது பயன்படுத்தக்கூடிய சுகாதாரம் தொடர்பான அப்ளிகேஷன்கள் போன்றவற்றை உள்ளடக்குவதற்கு இணைப்பிற்கு அப்பால் டிஜிட்டல் உள்வாங்கலின் செயற்பரப்பெல்லையை விரிவுபடுத்துவதற்காக Huawei அண்மையில் இலங்கையில் டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALL ஐ அறிமுகப்படுத்தியது.