உலகம்

யாழ்.மூதாட்டிக்கு புதிய வீட்டினை கட்டிக் கொடுத்த தென்னிலங்கைப் பெரும்பான்மை இன பெண்!

உரும்பிராய் மேற்குப் பகுதியில் முதியவர் ஒருவருக்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.


கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


குறித்த விடயத்தை அறிந்த நுகேகொடை பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன பெண்மணியான துஷாரா தேனுவர என்பவர் இவர்களுக்கான வீட்டினை அமைத்து கொடுக்க முன் வந்திருந்தார்.


இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டி முடிக்கப்பட்ட வீட்டினை தனது பிறந்த தினமான இன்று அந்தப் பெண்மணி கையளித்தார்.


இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குறித்த பெண்மணியிடம் வீட்டினை ஒப்படைத்தார்.

நிகழ்வில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles