உலகம்

கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு : இலங்கையில் இதுவரை 9 பேர் பலி !

இலங்கையில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.


கொழும்பு 15, மோதரை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் ஐ.டி.எச் . வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொழும்பு 15, மோதரை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியவர்கள் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலன்னாவ ,சாலமுல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் நெருங்கிப் பழகிய சுமார் 30 பேர் கண்டக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்படி ராஜகிரிய ,கொலன்னாவ பகுதிகளில் இருந்து மொத்தமாக 56 பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles