ஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்

கொரோனா பரவல் காரணமாக தடைபட்ட இங்கிலாந்து, இலங்கை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடந்த மார்ச் மாதம் விஜயம் மேற்கொண்ட ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது.

இதற்குத் தயாராகும் வகையில் பயிற்சி போட்டியிலும் பங்கேற்றது.
ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க, பயிற்சி போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

10 நாட்கள் இலங்கையில் இருந்த இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை ரத்து செய்து விட்டு, மீண்டும் இங்கிலாந்து திரும்பியது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் இரத்தாகின.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவிக்கையில்,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்வரும் 2021 ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றியுள்ளோம்.

இதற்கான திகதிகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அதேபோல ஒத்திவைக்கப்பட்ட தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர், எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இடம்பெறவுள்ள இந்தியாத் தொடர் மற்றும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் தொடர்களையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *