உலகம்

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான் – அதிகாரப்பூர்வ தகவல்

ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.


இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அடுத்ததாக நடிக்கும் படங்கள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராசி கண்ணா, அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என கூறினார்.

Hot Topics

Related Articles