உலகம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகில் பெரும்பலான நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமைச்சரவை கூட்டத்தை வீடியோ கொன்பரன்சிங் மூலம் கூட்டினார்.

இதன்போது பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டின் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவுதம் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்தார்.

இதையடுத்து, ரஷ்யாவின் துணை பிரதமராக அன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் இதுவரை 106,498 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,073 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 11,619 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles