உலகம்

‘தல’ அஜித்தின் 49 வது பிறந்த நாள் இன்று

‘தல’, ‘தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார்.


இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய இரண்டு படங்களும் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.

கார் பந்தய வீரராக தல அஜித் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில்,கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால் படப்பிடிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டன. இதன்காரணமாக திட்டமிட்ட வகையில் தல அஜித்தின் வலிமை படம் வெளிவராத நிலை உருவானது.

இருப்பினும் இன்று பிறந்தநாள் காணும் தல அஜித் குமாருக்கு படக்குழுவினர் சார்பில், அவர் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், மும்பை திரையுலகில் நடிகர் இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களாலும், கொரோனா பரவல் தடுப்பு காரணமாகவும்,’ வலிமை’ படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாது என்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், இணையத்தில் அவரைப்பற்றிய பல நிகழ்வுகளையும், பல போஸ்டர்களையும் உருவாக்கி உற்சாகத்துடன் தல அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

Hot Topics

Related Articles