இலங்கையில் இன்று மே மாதம் முதலாம் திகதி 6 மணிவரையான காலப்பகுதி வரை 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தின அடையாளம் காணப்பட்டுள்ள 9 பேரில் 5 பேர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் எனவும் ஒருவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய மூவரும் கடற்படை வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை கொரோனா தொற்று உறுதியான 507 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 145 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, இதுவரை 157 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.