உலகம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உயிருடன் இருக்கிறாரா ? உயிருடன் இல்லையா ? தகவல் இதோ !

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் – உன் உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில் உலக நாடுகள் பல ஆவலாக உள்ளன.
கிம் ஜொங் உன் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் ஆனால் அவரால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் வடகொரியாவின் முன்னாள் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


36 வயதான கிம் ஜொங் உன் கடந்த 15 ஆம் திகதி முதல் பொது வெளியில் அவரைக் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரப்பட்டன.

கடந்த 2014 ஆம் ஆண்டும் கிம் ஜொங் ஒரு மாதத்திற்கு காணாமல் போயிருந்தார். அப்போதும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவே கூறப்பட்டது. எனினும் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் முன் தோன்றினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துகொள்ளவே அவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு மூளைச் சாவு அடைந்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல்கள் வெளியாகியுள்ளன. கிம் ஜொங் உன் குறித்து இதுவரை எந்தவித உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் வடகொரியாவின் முன்னாள் தூதுவர் தே யாங் ஹோ சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

கிம் ஜொங் உன் வடகொரியாவின் தலைவர் மட்டுமல்ல. கிம் சங்கின் பேரனும் ஆவார். அவருக்கு உண்மையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தெரியும். அவர் உயிருடன்தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து கூட நிற்க முடியாத நிலை உள்ளது என வடகொரியாவின் முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கிம் ஜொங் எழுந்து நின்றாலும் நடக்க முடியவில்லை. அவரது உடல் எடை அதிகரித்துள்ளது. உடல் பலவீனமாக உள்ள நிலையில் அவரது உடல் எடையுடன் அவர் போராடி வருகிறார்.

கிம் இறந்துவிட்டார் என்றும் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என வெளிவரும் தகவல்கள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். உண்மையில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை உறுதி செய்பவர்கள், அவரது மனைவியும் அவரது சகோதரியும் ஆவார்கள்.

எனவே அவர் எங்கிருக்கிறார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டு கிம்மின் தந்தை உயிரிழந்ததையே 51 மணித்தியாலங்கள் பின்னரே அறிவித்தார்கள் என்றார்.

Hot Topics

Related Articles