உலகம்

மகனுடன் நடனமாடும் நடிகை – வைரலாகும் காணொளி

மூத்த நடிகையான கனிகா தன் மகனுடன் நாட்டியமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் எதிரி, வரலாறு, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் இருக்கிறார்.

பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவிட விரும்பும் கனிகா, தற்போது அவருடன் சேர்ந்து டிக் டொக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மகனின் உடையை தானும், தன்னுடைய உடையை மகனுக்கும் அணிவித்து நடனம் ஆடியிருக்கிறார்.

இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles