உலகம்

8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்

எதிர்வரும் காலத்தில், பயனர்கள் கோல்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து குரூப் கோல் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் குரூப் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல்களில் எட்டு பேர் பங்கேற்கும் விதமாக புதிய வசதி தரப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே உரையாட முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில், கொரோனாவால் வீடுகளில் முடங்கிப் போனவர்கள் அதிகம் பேருடன் தொடர்பு கொள்ளும் விதமாக இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிகப்படுத்தி இருக்கிறது.

புதிய அம்சம் வாட்ஸ்அப் அண்ட்ரொய்ட் மற்றும் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப் குரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம்.

இதுதவிர, பயனர்கள் கோல்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து குரூப் கோல் செய்யலாம்.

Hot Topics

Related Articles