உலகம்

விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு போராட்டத்துக்கு இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.


கொரோனா தொற்றுக்கான எதிர்ப்பு போராட்டதில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவில் பணிபுரிகின்றவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் செனிடைஸர் உள்ளிட்ட பொருட்களை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கடந்த வெள்ளியன்று (24) பொலிஸ் சிறப்பு அதிரடி படைப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கினர்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான கருப்பையா ராமகிருஷ்ணன், சங்கத்தின் செயலாளரான சத்துக்க திவாஷன மற்றும் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சாரங்க பத்திரன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் அழைப்புக்கு அமைய இந்தப் பொருட்களை வழங்கிவைப்பதற்காக நிதி உதவியளித்த தேசமான்ய பேராசிரியர் எச்.டி.ஆர் பிரியன்தவும் கலந்துகொண்டிருந்தார்.

Hot Topics

Related Articles