உலகம்

ஜோதிகாவால் சூர்யாவின் படங்கள் வெளியாவதில் சிக்கல்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் படமாளிகைக்கு வெளியாகாமல் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருப்பதால், அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

திருமதி ஜோதிகா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக மே மாதம் முதல் வாரத்தில் டிஜிற்றல் தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவின் இந்த நிலைபாடு குறித்து, தமிழக படமாளிகை அதிபர் சங்கத்தில் பொது செயலாளர் திரு ரோஹிணி பன்னீர்செல்வம் காணொளி ஒன்றின் மூலம் பேசுகையில்,

“சிலபல ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது 2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படம் திரைக்கு வராமல், நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வந்து இருக்கிறது.


இந்த கொரோனாவால் மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து, 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

இச்சுழலில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்ட போது நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக சூர்யாவின் நடிப்பில் தயாராகியிருக்கும் சூரரைப்போற்று, கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் சுல்தான் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் படங்கள் திரையில் வெளியாகாது என்கிறார்கள்.

Hot Topics

Related Articles