உலகம்

இலங்கையில் கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா : குழந்தை பலி

இலங்கையில் பதிவான 415 ஆவது தொற்றாளராக கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று மாலை இந்த கர்ப்பிணி இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கேசரிக்கு தெரிவித்தார்.

கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த கர்ப்பிணித் தாயின் வயிற்றில் இருந்த குழந்தை, தற்போது உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வயிற்றிலிருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வைத்திய பரிசோதனைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

Hot Topics

Related Articles