டக்கேடாவினால் பரிசோதிக்கப்பட்டுள்ள டெங்கு நோய்க்கு (TIDES) எதிரான டெட்ரவாலன்ட் நோய்த்தடுப்பு டெங்கு தடுப்பூசி பரிசோதனையின் (TAK-003) 3ஆவது கட்டத்தின் 18 மாதத்திற்கான முடிவுகள் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நெஷனல் ஹாபர் வளாகத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெப்பமண்டல வைத்தியர் மற்றும் சுகாதார சங்கத்தின் (ASTMH) 68ஆவது சம்மேளனத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பரீட்சார்த்த நடவடிக்கையின் போது தேவையான அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தடுப்பூசியின் துரித செயற்பாடுகள் குறித்து பரிசோதிக்கும் போது நோயின் இரண்டாம் நிலையான செரோடைப், பேஸ்லைன் சேரோஸ்டேடஸ் போன்ற சந்தர்ப்பங்கள் மட்டுமன்றி நோயின் பாரதூரமான சந்தர்ப்பங்களான வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பம் மற்றும் கடுமையாக டெங்குவால் பீடிக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகிய கட்டங்களின் போது பரிசோதனைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது.

நியூ இங்கிலன்ட் ஜேர்னல் ஒஃவ் மெடிசின் சஞ்சிகையினால் (New England Journal of Medicine) வெளியிடப்பட்டுள்ள, 12 மாதகால முதன்மை செயல்திறன் தரவின் அடிப்படையில் கூடுதலான தரவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் 4 வருடங்கள் 05 மாதங்களுக்கு இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோயானது நுளம்பினால் மிகவும் துரிதமாக பரவக்கூடிய வைரஸ் நோயாகும். உலக சுகாதார அமைப்பிற்கு அமைய 2019ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் இதுவாகும்.

உலகில் அரைவாசி பேர் இந்த டெங்கு நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதுடன் வருடம் தோறும் 390 மில்லியன் பேர் டெங்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகுவதோடு வருடம் தோறும் 20000 பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here