உலகம்

இலங்கையின் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டல்களை வழங்கும் அங்கரின் தொடர் பயணம்

மாணவர்களுக்கு தமது எதிர்கால கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான திறந்த மற்றும் ஊக்கமளிப்புடன் கூடிய சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்கள் வழிகாட்டிகள் மற்றும் பாடசாலையின் உதவி கட்டமைப்பு போன்றன முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.


தமது திறமைகளை வெளிப்படுத்த இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஊக்குவிப்பை வழங்குவதில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்த ஃபொன்டெராவின் முன்னணி நாமமான அங்கர் அணியினர், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், பஸ்யால ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது பாடசாலைக்கு பயணம் செய்திருந்ததுடன் அபிமன் வரம் திட்டத்தில் பங்கேற்று, வெற்றியீட்டிய மாணவர்களுக்கு உதவிகளை வழங்க பொறுப்பாக செயலாற்றிய நபர்களை பாராட்டியிருந்தது.

அங்கர் மற்றும் MBC வலையமைப்பு ஆகியன இணைந்து அபிமன் வரம் திட்டத்தை வடிவமைத்ததுடன் இளம் மாணவர்களுக்கு தமது முழு ஆற்றலை எய்துவதற்கு அவசியமான ஊக்குவிப்பு மற்றும் ஈடுபாட்டுடனான வழிகாட்டல் போன்றன வழங்குகின்றன. இந்த திட்டத்தின் இறுதிகட்டத்தில், சிறந்த திறமை படைத்த 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


இவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன் இவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதுடன் தாம் தெரிவு செய்த பிரிவுகளில் ஒரு வருட காலத்துக்கு அவசியமான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இலங்கையுடன் அங்கர் கொண்டுள்ள உறவு 40 வருடங்களுக்கு மேற்பட்டதுடன், இன்றைய தலைமுறையினரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஊக்குவிப்பது என்பதில் வர்த்தக நாமம் நம்பிக்கை கொண்டுள்ளது. அங்கர் ஃபொன்டெரா வர்த்தக நாம முகாமையாளர் தினித் பதிரன கருத்துத் தெரிவிக்கையில்,


“இளைஞர்களின் சக்தி, அவர்களின் வளம் மற்றும் ஆக்கத்திறன் போன்றன உலக நாடுகளின் அபிவிருத்தியில் பங்களிப்பு வழங்கக்கூடிய உறுதியான அம்சங்களாக அமைந்துள்ளன.

இலங்கையில் காணப்படும் சிறந்த சிந்தனைகளையும் திறமைகளையும் கொண்ட மாணவர்களுக்கு தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இலக்குகளை எய்துவதற்கு பொருளாதார சவால்கள் தடையாக தடையாக அமையாத காலமே இப்பொழுது வந்துள்ளது.” என்றார்.

“அபிமன் வரம் என்பது, எமது சமூகத்துக்கும் தேசத்துக்கும் மீள வழங்குவதற்காக நாம் முன்னெடுத்த திட்டமொன்றாக அமைந்துள்ளது. இதனூடாக, மாணவர்களுக்கு தமது எதிர்காலம் தொடர்பில் திட்டமிட்டு இயங்கி, தமது கனவையும், வாழ்வாதாரத்தையும் நோக்கி பயணிக்க உதவுவது எதிர்பார்ப்பாகும்.” என்றார்.


ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில், அங்கர் அணியினர், வெற்றியாளர்களை சந்தித்திருந்ததுடன், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.

அபிமன் வரம் திட்டத்தின் கலைநய பிரிவின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட துலங்கா செவ்மினி வாஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சிறு வயது முதல் நான் கலையில் அதிகளவு நாட்டம் கொண்டிருந்தேன்.

வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இந்த திட்டத்தினூடாக எனக்கு இந்த பயணத்தில் அடித்தளம் வைக்க வாய்ப்பு கிடைத்தது.


எனது திறமைகளை ஊக்குவிக்கும் எனது பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். அபிமன் வரம் திட்டத்தில் பங்கேற்பதற்கு எனக்கு ஊக்குவிப்பு வழங்கிய எனது ஆசிரியை கீதா அப்சரா அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

“மாணவர்களுக்கு தமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

தமது கனவுகளை நிறைவேற்றும் வகையில் சகல மாணவர்களையும் இயங்க வேண்டுமென நான் அழைப்பதுடன், உங்கள் பாடசாலை மற்றும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவராக திகழ வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.


கல்வி பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட சயுரி பொன்னம்பெரும மாணவி கல்வி கற்ற குருநாகல், எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க பாடசாலையின் அதிபர் விஜயநந்த தர்மசேன கருத்துத் தெரிவிக்கையில், “பாடசாலையை பொறுத்தமட்டில் இது மிகவும் பெருமைக்குரிய காலமாகும். பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக, எமது பாடசாலைக்கு உதவிகளை வழங்க ஃபொன்டெரா முன்வந்தமைக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

“இந்த திட்டத்தினூடாக சயுரி பொன்னம்பெரும போன்ற மாணவர்களுக்குரூபவ் வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்கிரூபவ் தமது பாடத்திட்டம் சாரா செயற்பாடுகளிலும், கல்விச் செயற்பாடுகளிலும் சிறப்பாக செயலாற்றிரூபவ் வெற்றிகரமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. சிரச மற்றும் ஃபொன்டெரா நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் சிறந்த நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.” என்றார்.

அங்கர் பற்றி

நியுசிலாந்தில் 1886 ஆம் ஆண்டு அங்கர் உருவாக்கப்பட்டதுடன், 70 நாடுகளில் விற்பனையாகும் உலகின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. 130 வருட கால துறைசார் அனுபவம், புத்தாக்கம் மற்றும் சர்வதேச உற்பத்தி நிபுணத்துவம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

160 க்கும் அதிகமான தயாரிப்புகளில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கர் கிடைக்கின்றது. ஃபொன்டெராவினால் உற்பத்தி செய்யப்படும் அங்கர்ரூபவ் பரந்தளவு பாலுற்பத்திகளை கொண்டுள்ளது. இதில் பால், யோகட், தயிர், பட்டர் மற்றும் கிறீம் போன்றவற்றுடன் பால் மாவும் அடங்கியுள்ளது. தாய்மார் முதல் பிள்ளைகள்ரூபவ் சமையல் நிபுணர்கள் மற்றும் உணவகங்கள் என நாட்டின் பரந்தளவு வாடிக்கையாளர்களின் தெரிவாக அமைந்துள்ளது.

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா பற்றி

இலங்கையர்களுக்கு சுமார் 40 வருட காலமாகரூபவ் பொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா உயர் பாற் போஷாக்கை தனது அங்கர் உற்பத்தி அடங்கலாக சகல தயாரிப்புகளினூடாக வழங்கியுள்ளது. 10,000 க்கும் அதிகமான நியுசிலாந்தின் பாற்பண்ணையாளர்களின் உரிமையாண்மையைக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகத் திகழ்வதுடன் உள்நாட்டில் எமது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றோம். இலங்கையை சுகாதாரமான மகிழ்ச்சியான தேசமாக திகழச் செய்வதற்கு நாம் எமது வியாபார பங்காளர் வலையமைப்பின் வியாபாரிகள், விற்பனையாளர்கள், விநியோகத்தர்கள், முகவர்கள் மற்றும் பாற்பண்ணையாளர்களினூடாக சுமார் 100,000 பேருடன் மறைமுகமாக பணியாற்றி வருகிறோம்.

Hot Topics

Related Articles