STI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்

STI ஹோல்டிங்ஸ் இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoringசேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையான ஆய்வை வெற்றிகரமாக மேற்கொள்கிறது.

இலங்கையின் முன்னணி இரும்பு தயாரிப்பாளரும், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பாகங்களை உற்பத்தி செய்யும் St. Theresa Industries (STI) ஹோல்டிங்ஸ் நிறுவனம், Hubbell Power System Inc, helical pile மற்றும் சுமை சோதனை தொடர்பான செய்முறை பாடத்திட்டமொன்றை பிலியந்தலையிலுள்ள இலங்கை மின்சார சபையின் பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடத்தியது.

இந்த வேலைத்திட்டத்தின் போது ஹெலிகல் இரும்பு கொங்கிறீட் தூண்கள் (Pile) அறிமுகம் பயன்படுத்தப்பட்ட வடிவமைப்பு முறை பற்றிய விளக்கம், முந்தைய செயற்பாடுகளின் ஆய்வுகளின் பகுப்பாய்வு மற்றும் ஹெலிகல் இரும்பு கொங்கிறீட் தூண்களை அமைத்தல் மற்றும் சுமை சோதனை தொடர்பான செய்முறைகள் இந்த பாடத்திட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளன.

Hubbell Power System இன் மிகவும் திறமையான பொறியியலாளர்கள் குழுவின் சிறந்த பொறியியலாளர்கள் பங்கேற்று ஹெலிகல் Pile வடிவமைப்பு மற்றும் பயன்பாடு பற்றி விரிவான விளக்கங்களை வழங்கினர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த STI Holdings இன் அமைப்பாளர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் கொலின் பெர்னாண்டோ, “ஹப்பல் பவர் சிஸ்டம் போன்ற உலகளாவிய முன்னணி கூட்டாளர்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களது அனுபவம் மிக்க நிபுணத்துவத்தை ஆராய்ந்து படிப்பதன் மூலம் ஹெலிகல் பைல் அமைக்க பங்களிப்பு செய்த பொறியியலாளர்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், செயன்முறைகளை சுருக்கமாக ஆராயக்கிடைத்தது.

புதுமையான தயாரிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறமையான மற்றும் குறைந்த செலவுகளைக் கொண்ட திட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது மிக உயர்ந்த இலக்கை மேம்படுத்துவதில் இது நீண்டதூரம் செல்லும்” என தெரிவித்தார்.

ஹெலிகல் இரும்பு கொங்கிறீட் தூண்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக உலகம் முழுவதிலும் குடியிருப்பு, இலகுவான வணிக மற்றும் கனரக வணிக கட்டுமானம், இயந்திரங்கள் மற்றும் உபகரண கட்டமைப்பு, தொலைதொடர்பு மற்றும் பரிமாற்றக் கோபுரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஈரநிலங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்களில் நடைபாதைகள் ஆகியவற்றுக்கு விருப்பமான அடித்தளமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

விரிவான மண் பகுதிகளில், ஹெலிகல் இரும்பு கொங்கிறீட் தூண்கள் ஏனைய விலையுயர்ந்த அகழ்வாராய்ச்சி மற்றும் நிரம்புதல் செயற்பாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் செலவு குறைந்தவையாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த STI Holdings இன் பணிப்பாளர் – தொழில்நுட்ப முகாமையாளர் மதுசங்க பெர்னாண்டோ, “நாம் செய்து நிரூபித்துள்ள தொழில்நுட்பம் உலகம் முழுவதும் புதுமையானது அல்ல.

இருப்பினும், அவை உலகின் பொரும்பாலானவற்றில் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்புக்களின் பயன்பெறுவோர் இந்த அமைப்புக்களைப் போலவே சிறந்தவர்கள். இந்த ஹெலிகல் நங்கூரக் கட்டமைப்புக்கள் எளிமையான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும், அமேசான் வனப்பகுதி வழியாக 10,000 கிலோ மீற்றர் கோபுர வரிசை போன்ற பிரமாண்டமான திட்டங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

STI Holdings மின்சாரம், சூரிய சக்தி, கலப்பின சூரிய, கட்டுமானம், மின்மயமாக்கல், இரும்பு புனையமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றின் பரிமாற்றம் மற்றும் விநியோக செயற்பாடுகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்கிறது. 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட STI Holdings மின் உற்பத்தி மற்றும் தொழில்துறை இரும்பு தயாரிப்பு உற்பத்தியாளர்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய இலங்கையின் உண்மையான அதிகார மையமாக திகழ்கிறது. STI Holdings இலங்கையின் மின்சார விநியோகத்தில் 98 வீத நடவடிக்கைகளை அதன் பரிமாற்ற கோபுரங்கள் மூலம் நிர்வகித்து வருகின்றது.

STI Holdings ஐந்து துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவை, செயின்ட் தெரேசா இண்டஸ்ட்ரீஸ், செயின்ட் தெரேசா இண்டஸ்ட்ரீஸ் கென்யா, சமுத்திரா லங்கா, STI புரொஜெக்ட் மற்றும் SINO-STI கார்பரேஷன் ஆகியனவாகும். ஒவ்வொரு நிறுவனமும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார வழிகள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

Hot Topics

தமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...

இலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் !

இலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...

788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு!

உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...

Related Articles