இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபா 2 இலட்சம் மதிப்பிலான ஆமைக் குட்டிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இலங்கையில் இருந்து மலின்டோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (24ஆம் திகதி) காலை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, 2 பயணிகள் தங்கள் உடைமைகளுக்குள் மறைத்து, நூற்றுக் கணக்கான அரியவகை ஆமைக்குட்டிளை கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுலைமான் (42), அப்துல் ரவூப் (36) என்பதும், மருத்துவ பயன்பாட்டிற்காக அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆமைக் குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக் குட்டிகளின் வகை மற்றும் தன்மையை ஆய்வு செய்த பின்னர், அவைகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அத்துடன், அவற்றை கடத்தி வந்த 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here