THE BIG BAD WOLF BOOK SALE தனது RED READERHOOD வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பினூடாக 3,500 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையளித்துள்ளது.
The Big Bad Wolf Book Sale புத்தக விற்பனை நிகழ்வு இவ்வாண்டு முழுவீச்சில் இடம்பெற்றதுடன் விற்பனை இடம்பெற்ற 11 நாட்களும் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் புத்தக ஆர்வலர்களை பெருந்திரளாக ஈர்த்துள்ளது.
பொதுமக்களுக்காக ஒக்டோபர் 18 ஆம் திகதியன்று திறந்துவைக்கப்பட்ட இப்புத்தக விற்பனை நிகழ்வு, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் (Sri Lanka Exhibition and Convention Centre – SLECC)இடம்பெற்றதுடன் 2019 ஒக்டோபர் 28 அன்று மிகவும் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.
250,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ளதுடன் இலங்கையில் இத்தகைய அளவிற்கு பிரம்மாண்டமாக இடம்பெறுகின்ற தனித்துவமான ஒரு நிகழ்வு என்ற ஆதிக்கத்தை நிலைநாட்டிரூபவ் உலகளாவில் ஏனைய பல்வேறு பிராந்தியங்களிலும் இதே ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மக்கள் கட்டுபடியாகும் விலைகளில் புத்தம்புதிய ஆங்கில மொழி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியது மட்டுமன்றிரூபவ் மிகச் சிறந்த புத்தகத் தெரிவுகளையும் Big Bad Wolf Book Sale புத்தக நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் வாசிப்பதற்கு வாய்ப்பளித்து குறிப்பாக கிராமப்புறங்களில் எழுத்தறிவின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கத்திற்கு உண்மையாக அர்த்தம் கற்பிக்கும் வகையில், Big Bad Wolf Book Sale தனது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு அங்கமான Red Readerhood (RRH) ஊடாக சிறுவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தேவைகளை எதிர்பார்த்துள்ள சமூகங்களுக்கு நன்கொடையாக வழங்குவதற்காக 3,500 இற்கும் மேற்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வெற்றிகரமாகச் சேகரித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதான மாவட்டங்களில் பராமரிப்பு இல்லம் மற்றும் கல்வி மையங்களை இயங்கி வருகின்ற ஒரு சமூகத் தொண்டு குழுமமான Centre of Hope உடன் இந்த ஆண்டில் Big Bad Wolf Book Sale கைகோர்த்துள்ளது. பொருளாதாரரீதியாக நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கான உதவிகளை இந்த மையங்கள் வழங்கி வருகின்றன.
இந்த ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற முன்னெடுப்பு தொடர்பில் Big Bad Wolf Book Sale இன் ஸ்தாபகரான ஜாக்குலின் நேக் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,
“நாம் தொழிற்படுகின்ற சமூகங்கள் மத்தியில் கைம்மாறு செய்வது என்பது எமது கலாச்சாரத்தில் உட்பொதிந்துள்ளதுடன் நிறுவனத்தின் வரலாற்றில் அதற்கு எப்போதும் தனித்த இடமுண்டு. உள்நாட்டிலுள்ள ஸ்தாபனங்களுடன் இணைந்து பணியாற்றி எமது நோக்கங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தகங்கள் அனைவருக்கும் கிடைத்தல் வேண்டும் எனவும் ஆங்கில அறிவை மேம்படுத்தி உலகினை கற்றுக்கொள்வதற்கு அது ஒரு மகத்தான வழி எனவும் நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த நோக்கத்திற்கு நன்கொடையளிக்கும் வகையில், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள Red Readerhood கருமபீடத்தில் புத்தக விற்பனை நிகழ்வுக்கு வருகை தருகின்ற பார்வையாளர்கள் புத்தகங்களை வாங்கி நன்கொடையளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் Red Readerhood முன்னெடுப்பு இடம்பெற்று வருகின்றது. புத்தக விற்பனை நிகழ்வினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக 500 புத்தகங்களை தாம் நன்கொடையாக வழங்குவோம் என்ற உறுதிமொழியுடன் Big Bad Wolf Book Sale இந்த முன்னெடுப்பினை ஆரம்பித்து வைத்திருந்தது.
Big Bad Wolf Book Sale Colombo 2019 புத்தக விற்பனை நிகழ்வானது பார்வையாளர்களுக்கு பல்வேறு மறக்க முடியாத நினைவுகளைத் தோற்றுவித்துள்ளது. அனைத்து வயது மட்டங்களையும் சார்ந்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என நிகழ்வு மண்டபம் நிரம்பி வழிந்ததுடன் வியப்பூட்டும் புத்தகங்களை வாங்கி வாசிக்கும் வாய்ப்பினைத் தவறவிடக்கூடாது என்பதில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காணப்பட்டனர்.
ஏராளமான மாணவர்களையும் இந்த விற்பனை நிகழ்வு ஈர்த்திருந்ததுடன் மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக விற்பனை நிகழ்வுக்கான வெளிக்கள சுற்றுலாவையும் சில பாடசாலைகள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
BIG BAD WOLF BOOKS தொடர்பான விபரங்கள்
Big Bad Wolf Books ஸ்தாபகர்களான அன்ட்ரூ யாப் மற்றும் ஜாக்குலின் நேக் அவர்களின் எண்ணக்கருவான இவ்விற்பனை, 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் சர்வதேச வழங்குனர்களிடமிருந்து பல்வேறு வகைப்பட்ட வியப்பூட்டும் புத்தகங்களைக் கொண்ட ஒரு விற்பனை மையமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் கட்டுபடியாகும் விலைகளில் கிடைக்கப்பெறுகின்றமை மற்றும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளமை காரணமாக மிகக் குறுகிய காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் நாடளாவியரீதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் Big Bad Wolf Books விற்பனை நிகழ்வு வளர்ச்சி கண்டுள்ளது.
புத்தம் புதிய ஆங்கிலப் புத்தகங்களை பரிந்துரை செய்யப்பட்ட சில்லறை விலைகளிலும் பார்க்க 50 வீதம் முதல் 90 வீதம் வரையான தள்ளுபடிகளுடன் வழங்குவதுடன் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் புனைகதைகள் மற்றும் புனைகதை அல்லாத நூல்கள்ரூபவ் இளம் பராயத்தினருக்கான புனைகதைகள் மற்றும் பரந்த அளவிலான சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கலாக அனைத்து வகையான பலதரப்பட்ட புத்தகங்கள் இப்புத்தக விற்பனை நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை விட தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான், மியன்மார், தாய்வான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கும் இது தற்போது வெற்றிகரமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.