உலகம்

ICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”

இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச அரச முகவர் ஸ்தாபனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (Information and Communication Technology Agency of Sri Lanka – ICTA), தொழில்முயற்சியாண்மை தொடர்பில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்ற இளங்கலை மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ‘’ImagineIF program’’ என்ற தலைப்பின் கீழ் செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.


நடைமுறைச் சாத்தியமான வர்த்தகத் திட்டங்களை சர்வதேசரீதியில் முன்னெடுக்கக்கூடிய வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்கும் வகையில் ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களைக் கட்டியெழுப்புவதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். காலப்போக்கில் வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக மாறுவதற்கான அத்திவாரத்தை இட்டு, தொழில்முயற்சியாண்மைக்கு வித்திடும் வகையிலான உள்ளடக்கங்கள் இச்செயலமர்வுகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்ரூபவ் வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக தற்போது இச்செயற்திட்டம் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையிலுள்ள எட்டு அரச பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே ImagineIF செயலமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்கள் , உயர் கல்வி ஸ்தாபனங்களின் வேறுபட்ட கல்விப்பீடங்களைச் சார்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளார்கள்.


பல்கலைக்கழகத்தில் மூன்று தினங்களுக்கு இடம்பெறுகின்ற இந்நிகழ்வுரூபவ் செயலமர்வு வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செயலமர்வின் முதல் நாளில் தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை கருப்பொருள் விளக்கப்பட்டு, சிந்தனை ஒன்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது, உற்பத்திகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது, புதிய சிந்தனைகளை எவ்வாறு ஆராய்ச்சியின் மூலமாக வெளிக்கொணர்ந்து சந்தையில் மிகவும் நடைமுறைச் சாத்தியமான வர்த்தக முறைமையாக மாற்றியமைப்பது தொடர்பில் பங்குபற்றுபவர்களுக்கு தெளிவூட்டப்படுகின்றது.

இரண்டாம் நாள் வினோதாம்சங்கள் மற்றும் உற்சாகமூட்டும் விடயங்கள் அடங்கியதாகக் காணப்படுவதுடன், மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நடைமுறைச் சாத்தியமான வர்த்தக கருப்பொருளை வெளிக்கொண்டு வருமாறு கேட்கப்படுகின்றனர்.

அதேவேளை தொழிற்துறை வல்லுனர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் அனுசரணையுடன் வழிகாட்டல் அமர்வுகள் இடம்பெறுகின்றன. பங்குபற்றுகின்றவர்களின் வர்த்தக சிந்தனையை வர்த்தகத் திட்டங்களாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அறிவை தன்னார்வ அடிப்படையில் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மூன்றாவது நாள் மிகுந்த இடைத்தொடர்பாடல் கொண்டதாக அமைந்துள்ளதுடன் வழிகாட்டல் மற்றும் அனுசரணை உதவியுடன் பங்குபற்றுகின்றவர்கள் தமது வர்த்தகத் திட்டங்களை முன்வைக்கும் களப் போட்டியொன்று இடம்பெறுகின்றது. நடுவர் குழாம் முன்னிலையில் இது இடம்பெறுவதுடன் அவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தொழிற்துறையால் ஏற்றுக்கொள்ளப்படும் சான்றிதழ்கள் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்றன.


தமது அடுத்த கட்டத்திற்கு நகர விரும்புகின்ற மாணவர்கள் தங்களுடைய சக மாணவர்களுடன் இணைந்து வர்த்தகத் திட்டங்களை வடிவமைத்து அவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதால் ஆரம்ப வர்த்தக முயற்சிகள் சார்ந்த ஒட்டுமொத்த சூழலுக்கும் இது நீண்டகால அடிப்படையில் நன்மையளிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்கலைக்கழக மாணவர்கள் சிறு வயதிலேயே சிந்தனையை விருத்தி செய்து, திறன்களை பகுத்தாய்வு செய்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன்களை வளர்த்து, சர்வதேச அளவில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்களாக மாற்றியமைத்துக் கொள்வதற்கு இச்செயலமர்வுகள் உதவுகின்றன.

Disrupt Asia program நிகழ்வின் ஒரு அங்கமாக 2017 ஆம் ஆண்டில் இந்த கருப்பொருளின் தேவை முதலில் உணரப்பட்டு, முன்னெடுக்கப்பட்டது. அரச மற்றும் அரசு சாரா பல்கலைக்கழக கல்வியாளர்கள், பல்கலைக்கழக நிர்வாக அமைப்புக்கள்ரூபவ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஆரம்ப வர்த்தக முயற்சிகளின் சூழல் தொகுதிகளுடனான கலந்துரையாடல்கள் மூலமாகரூபவ் தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டுள்ள இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்களின் காத்திரமான ஆதரவுடன் ImagineIF program என்ற கருப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்குபற்றியோருக்கு புதிய தொடர்புகளை ஏற்படுத்தி, அறிமுகங்களை வளர்த்து, அறிவைப் பகிர்ந்து, புதுமையான வர்த்தகச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதற்கு களம் அமைத்துக் கொடுத்தமைக்காக இச்செயலமர்வுகள் பாராட்டுக்களை வெகுவாக அள்ளிக் குவித்துள்ளன. தொழில் முயற்சி மீதான ஒரு தொழில்சார் அணுகுமுறையானது இதில் பங்குபற்றுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பெருமளவு பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தை ரூடவ்ர்த்துள்ளதுடன், வர்த்தக முயற்சியை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு மற்றும் ஆற்றல் என்பவற்றை அவர்கள் கொண்டுள்ளமையால் இது மிகவும் பயன்மிக்கதாகவும், ஒளிமயமான எதிர்காலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

மாணவர்கள் தமது சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, தமது சகாக்களின் துணையுடன் அவற்றை படைப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், இன்றைய பல்கலைக்கழக நடைமுறையுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் நேர்மாறான ஒரு வழிமுறையாக காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில் முயற்சியாளராக மாறுவதற்கு என்ன தேவைப்படுகின்றது என்பது தொடர்பான தெளிவான விளக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு குறும் கைத்தொழில் பயிற்சி அமர்வாக இது மாறியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் இது பல்கலைக்கழகங்களில் பிரத்தியேகமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், இச்செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ளவர்களின் அறிவை மேம்படுத்தி, ஒட்டுமொத்தமாக தொழில்முயற்சியாண்மை என்ற விடயத்தில் உற்சாக மேலீட்டையும் தோற்றுவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சாராத பின்புலங்களைக் கொண்டவர்களாக இருந்தமையால், அவர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாகவும் மாறியுள்ளது. எத்தகைய பாட விதானங்களை மாணவர்கள் கற்கின்றனர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால், பல்வேறுபட்ட கற்கைபீடங்களையும் சார்ந்த மாணவர்கள் இதில் பங்குபற்றியுள்ளதுடன், வர்த்தகச் சிந்தனைகளை வெளிக்கொணருவதில் பன்முக மற்றும் மாறுபட்ட குழுக்களாக இணைந்து செயற்பட்டமை, ஒட்டுமொத்த செயற்திட்டத்தைப் பொறுத்தவரையிலும் மாபெரும் உந்துசக்தியாக மாறியுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இச்செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக, வேறுபட்ட பல்கலைக்கழங்களின் ஒரே கற்கைபீடங்களுக்கு இடையிலான செயற்திட்டங்களாக இதனை முன்னெடுப்பதற்கு ICTA திட்டமிட்டுள்ளதுடன் அனைத்து பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஒரே கற்கைபீடத்தில் பயிலும் மாணவர்கள் ஒரே களத்தில் திரட்டப்பட்டு உரிய துறைகள் சார்ந்த வல்லுனர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் துணையுடன் தொடர் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

Hot Topics

Related Articles