உலகம்

நவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புகழ்பெற்ற நாமமான ஓவர்சீஸ் ரியால்டி (சிலோன்) பிஎல்சி, புதிதாக நிர்மாணிக்கும் ஹவ்லொக் சிட்டி வணிக அபிவிருத்தி தொகுதியில் 50 க்கும் அதிகமான அதிவேக எலிவேற்றர்கள், எஸ்கலேற்றர்கள் மற்றும் அசையும் நடைபகுதிகள் போன்றவற்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை உலகின் முன்னணி மொபிலிட்டி தீர்வுகள் வழங்குநர்களான Schindler Group நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.


1874 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நிறுவப்பட்ட Schindler, 140க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வருகின்றது. Trade Promoters Ltd இன் விநியோக உரிமையாண்மையின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக சேவைகளை வழங்கும் Schindler, இலங்கையில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் எலிவேற்றர் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி, 50 மாடிகளைக் கொண்டதுடன், 600,000 சதுர அடி அலுவலக கட்டடத் தொகுதியையும், 200,000 சதுர அடி சொப்பிங் தொகுதி ஒன்றையும் கொண்டிருக்கும். 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் சர்வதேச நியமங்களில் நிர்மாணிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத் தொகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. எஸ் பி தவோவின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்துள்ள ஹவலொக் சிட்டி, ஓவர்சீஸ் ரியால்டி (சிலோன்) பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான மிரேக கெப்பிட்டல் லான்டினால் நிர்மாணிக்கப்படுகின்றது.
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் வடிவமைப்பாளரும், நிர்வாகிப்போராகவும் இந்நிறுவனம் திகழ்கின்றது. மிரேக அலுவலக தொகுதி தரம் “A” உயர்மட்ட கட்டடமாக வமைக்கப்பட்டுள்ளதுடன் LEED GOLD சான்றிதழையும் பெற்றுள்ளது. பெருமளவு இடவசதியை ஏற்படுத்துவதை கவனத்தில் கொண்டு தூண்களின்றி பரந்தளவு நில பிளேட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மதிநுட்பமான உட்கட்டமைப்புடன், கணினிமயப்படுத்தப்பட்ட வாகன தரிப்பிடத்தையும் கொண்டுள்ளது.
Schindler எலிவேற்றர்கள் PORT தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், கட்டட நிர்வாக கட்டமைப்புடன், ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்ற வசதிகள் போன்றன வியாபாரங்களுக்கு ஒப்பற்ற போட்டிகர அனுகூலங்களை வழங்குவதாக அமைந்துள்ளன.

சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைமுறைக்கு பிரத்தியேகமான வகையில் வடிவமைக்கப்பட்ட சொப்பிங் தொகுதியாக, இங்கு நிர்மாணிக்கப்படும் சொப்பிங் கட்டடம் அமைந்துள்ளது. சொப்பிங் செய்வதில் ஆர்வம் படைத்தவர்களுக்கு இந்த தொகுதி சிறந்த விருந்தாக அமைந்திருக்கும் என்பதுடன் ஆறு மாடிகளைக் கொண்டிருக்கும். உலகின் முன்னணி வர்த்தக நாம தயாரிப்புகள், உணவகங்கள், விற்பனையகங்கள் மற்றும் களியாட்ட பகுதிகள் போன்றன இங்கு காணப்படும். இதற்கு மேலாக, நவீன வசதிகள் படைத்த சினிமா தொகுதி இங்கு அமைந்திருக்கும். இந்த சொப்பிங் தொகுதியில் 30க்கும் அதிகமான Schindler எஸ்கலேற்றர்கள் மற்றும் அசையும் நடை பகுதிகள் போன்ற அடங்கியிருக்கும், இதனூடாக கட்டடத்தினுள் மக்களுக்கு சுமூகமாக பயணிக்க ஏதுவாக இருக்கும்.

1976 இல் நிறுவப்பட்ட Trade Promoters Ltd (TPL) இல் 250க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இலங்கையில் அதிகரித்துச் செல்லும் Schindler வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் தன்னையும் படிப்படியாக வளர்த்த வண்ணமுள்ளது. TPL இன் தலைமையகம் தொழில்ஆலை, உதிரிப்பாக நிலையம் மற்றும் பயிற்சி நிலையம் ஆகியன மாலபே பகுதியில் அமைந்துள்ளன. விசேட விற்பனை அலுவலகம் அண்மையில் கொழும்பு 7, ஹோர்டன் பிளேஸ் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. Schindler இன் புத்தாக்கமான வழிமுறையினூடாக, இந்த திட்டத்துக்கு எமக்கு வெற்றிகரமாக பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது என Trade Promoters Limited (TPL) இன் இணை முகாமைத்துவ பணிப்பாளர் அனோமால் டி சொய்ஸா தெரிவித்தார்.

Image converted using ifftoany

“ஸ்மார்ட் நிலைக்குத்தான பயணிகள் நகர்வில் Schindler அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இது அமைந்துள்ளதுடன் வினைத்திறன் மற்றும் நிலைபேறாண்மை தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.” என மேலும் குறிப்பிட்டார்.

ஹவலொக் சிட்டியில் நிர்மாணிக்கப்படும் மிரேக அலுவலகத் தொகுதி, இலங்கையில் elevator destination management control system இனால் பயன்பெறும் முதலாவது வணிகக் கட்டடத் தொகுதியாக அமைந்திருக்கும். Schindler PORT (Personal Occupant Requirement Terminal) தொழில்நுட்பம் என்பது, மதிநுட்பமான மாற்று நிர்வாக எலிவேற்றர் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன் பிரத்தியேகமான சேவையை வழங்கி, மேம்படுத்தப்பட்ட கட்டட பாதுகாப்பையும் சேர்க்கின்றது. PORT தொழில்நுட்பத்தினூடாக, ஒரே பகுதிக்கு அல்லது அருகிலுள்ள மாடிகளுக்கு செல்லும் பயணிகளை ஒன்று திரட்டுவதை மேற்கொண்டு, ஒரே எலிவேற்றரில் அனுப்புகின்றது. இதனூடாக குறைந்தளவு இடைத் தரிப்புகளை உறுதி செய்ய முடிவதுடன், குறித்த மாடிக்கு சென்றடைவதற்காக பிரயாணிக்கு செல்லும் காலம் பெருமளவில் குறைக்கப்படுகின்றது.

கட்டடத்தின் மைய நரம்புத் தொகுதியைப் போன்று PORT தொழில்நுட்பம் அமைந்திருக்கும். கட்டடத்தின் சூழல் மற்றும் பயன்படுத்துவோரின் இரு வழி தொடர்பாடல் சாதனமாக இயங்கும். கட்டமைப்பின் காட்சி அமைப்பு என்பது எளிமையானது என்பதுடன் கட்டடத்தின் எலிவேற்றர்களின் அணுகல் பகுதிகளில் அமைந்திருக்கும். நவீன தொடு திரையை கொண்டிருப்பதுடன் சக்தி வாய்ந்த மென்பொருள் கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இதனூடாக கட்டடத்தின் எப்பகுதிக்கு பயணி செல்வதை கணிப்பிடுவது மாத்திரமன்றி பயணிகள் எவ்வாறு பயணிக்கின்றனர் என்பது தொடர்பில் அறிந்து கொள்ளலையும் மேற்கொள்கின்றது.

பாரம்பரிய எலிவேற்றர் கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில் PORT இனால் 30 சதவீதம் வேகமான வகையில் தமது இறுதிப்பகுதிக்கு சென்றடையக்கூடியதாக இருக்கும். கட்டடத்தினுள் பயணிப்போருக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்.

இலங்கையில் உறுதியான வளர்ச்சியை Schindler பதிவு செய்துள்ளது. இலங்கையில் நிர்மாணிக்கப்படும் Sheraton Hotel, Amari Colombo, Araliya Unawatuna, multiple Softlogic supermarkets, ODEL Negombo, Nestle Pannala factory, MAS Biyagama, JAT 96 Residenciesபோன்ற நிர்மாணங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதுடன் நாட்டின் நிர்மாண நடவடிக்கையில் ஈடுபடுவோரான Fairway Holdings, Prime Lands, Home Lands போன்றவற்றுடனும் இணைந்துள்ளது.

Hot Topics

Related Articles