உலகம்

நவலோக்க உயர் கல்வியியல் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா

மூன்றாம் நிலைக் கல்வி வழங்குனரான நவலோக்க உயர் கல்வியியல் கல்லூரியில் (NCHS) கல்வி கற்ற பட்டதாரிகள் மேற்படிப்பிற்காக அவுஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது மலேசியாவிற்கு செல்கின்றமையை முன்னிட்டு நிறுவனம் தனது 5ஆவது பட்டமளிப்பு விழாவை அக்டோபர் மாதம் 23ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடத்தியது.


டிப்ளோமா பாடநெறியின் கீழ் வணிகரூபவ் அறிவியல் மற்றும் பொறியியல்ரூபவ் அத்தோடு வணிக, தகவல் தொழில்நுட்பம், சுகாதார அறிவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றுடன் இணைந்த டிப்ளோமா கற்கை நெறியைப் பெற்ற 405 மாணவர்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வருடம் நவலோக்க உயர் கல்வியியல் கல்லூரியின் (NCHS) மற்றும் அமெரிக்க பட்டப்படிப்புத் திட்டத்தால் இந்நிகழ்வானது மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.

இந்த அனைத்து நிகழ்சித் திட்டங்களும் NCHS உலகளாவிய கல்வி முன்னோடிகளான ஸ்வின்பேர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (SUT) கூட்டிணைந்து மேற்கொள்ளப்படுவதோடு இது உயர்தரமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வித் தரத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
“நான் NCHS க்கு வரும் போது எனக்கு பொறியியல் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் எங்கள் விரிவுரையாளர்கள் எங்களுக்கு ஒரு தெளிவான படத்தைக் காட்டினார்கள். பாடங்களைக் கற்பிப்பது மட்டுமல்லாமல் உலகில் உண்மையில் என்ன இருக்கிறது.

சிறந்த பொறியியலாளராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். என்னுடன் கல்விபயின்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் கழித்த எல்லா நேரங்களும் என் வாழ்க்கைக்கு சிறந்த பாடங்களாகும் நன்றி” என பொறியியல் மாணவன் அஷ்வின் செனவிரத்ன தெரிவித்தார்.

NCHS மாணவர் சங்க மற்றும் சமூக ஊடக வலைப்பின்னல் மூலம் செனவிரத்ன ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து இந்த இளம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது மலேசியாவிற்கு தமது மேற்படிப்புக்காக புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தவிர, NCHS இன் தலைவர், பணிப்பாளர்கள், பணியாளர்கள், மற்றும் NCHS இன் ஆசிரிய உறுப்பினர்கள் இந்த பட்டப்படிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி கலந்து கொண்டதோடு பட்டம் பெற்ற அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“அவுஸ்திரேலிய கல்வியைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் உங்களை பாராட்ட விரும்புகிறேன். தொழிலுக்கு தேவையான தகுதிகளை வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இலங்கையிலுள்ள நவலோக்க உயர்கல்வியியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள முன்னோடி பங்காளிகளான ஸ்வின்பேர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழம் ஆகியவற்றையும் பாராட்ட விரும்புகிறேன். பட்டதாரிகளுக்கு இதுவொரு ஆரம்பபம் மட்டுமே. அடுத்துவரும் அத்தியாயங்கள் உங்களுக்கு தொழில் முறையையும் மற்றும் தனிப்பட்ட வெற்றிகளையும் தரட்டும்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு முக்கிய குறிப்புக்களை வலியுறுத்தி உரையாற்றிய SUT இன் உபவேந்தர் பேராசிரியர் சஹாரா மெடிசன்ரூபவ் பட்டதாரிகளுக்கு முதலில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கூறுகையில்,

இந்த நாள் உங்களது கடின உழைப்புரூபவ் முயற்சி மற்றும் உறுதியின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்களின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தின் மூலம் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதே ஸ்வின்பேர்னின் நோக்கமாகும். நீங்கள் அனைவரும் அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இருக்குறீர்கள் நவலோக்க உயர் கல்வியியல் கல்லூரியில் உங்கள் அனுபவம் உங்களை வாழ்நாள் முழுவதும் கற்போராக மாற்றியுள்ளது என்பததை நான் நன்றாக அறிவேன்” என தெரிவித்தார்.
SUT International இன் உபவேந்தர் பேராசிரியர் மொனிக்கா கென்னடி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உங்கள் பட்டப்படிப்பின் ஊடாக நீங்கள் பெற்ற நட்பு மற்றும் கற்றல் செயற்பாடுகளை உங்கள் வாழ்நாள் பயணத்தின் ஒரு முக்கிய படியாகக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் நவலோக்கா உயர் கல்வியியல் கல்லூரியின் கற்றல் மற்றும் ஊழியர்களது ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக நன்றி கூறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

NCHS கொழும்பில் மத்தியில் அமைந்துள்ளதுடன் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது. இதன் நோக்கம் கட்டமைக்கப்பட்ட பொறியியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், வளங்கள் நிறைந்த நூலக வசதிகளைக் கொண்டது.

NCHS கண்டி கல்வியக மாணவர்களுக்கு வசதியாக அமைந்துள்ளதுடன் கல்வித் தளத்தை கல்விசார் ஊழியர்களின் அணுகலுடனும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் வழங்குகிறது. இது அவர்களுக்கு விருப்பமான கல்வித் துறையைத் தொடர வசதியாக அமைகிறது. மேலும் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் வசதிகள் மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான விசா சேவை வசதிகளையும் எளிதாக்குகிறது.

Hot Topics

Related Articles