உலகம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சமூக செயற்திட்டங்களுக்கு தலைமை வழங்கிய HNB பினான்ஸ்

கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவதற்கு HNB பினான்ஸ் நிறுவனம் பல்வேறு சமூக செயற்திட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.


இதன் கீழ் குருநாகல் மாவட்டத்தில் நாகொல்லாகம ஸ்ரீ தம்மானந்த ஆரம்ப பாடசாலையை கேந்திரப்படுத்தி சர்வதேச சிறுவர் தின வைபவங்களை நடத்த HNB பினான்ஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக HNB பினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கலந்துகொண்டார்.

நீண்ட காலமாக தூய்மையான குடிநீர் பெற்றுக்கொள்வதில் அசௌகரியங்களை எதிர்கொண்ட நாகொல்லாகம ஸ்ரீ தம்மானந்த ஆரம்ப பாடசாலைக்கான தூய்மையான குடிநீரை வழங்க HNB பினான்ஸ் நடவடிக்கை எடுத்தது.

குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை பொருத்தி தூய்மையான குடிநீர் பிரச்சினையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. HNB பினான்ஸ் செயற்படுத்திய இரண்டாவது செயற்திட்டம் இதுவென்பதுடன் இதற்கு முன்னர் கல்பிட்டி முகத்துவாரம் ஆரம்ப பாடசாலையில் தூய்மையான குடிநீர் பெற்றுக்கொள்ளும் அசௌகரியத்தை தீர்த்து வைத்தது.


HNB பினான்ஸ் ஏற்பாடு செய்த உலக சிறுவர் தின கொண்டாட்ட செயற்திட்டத்தின் இன்னொரு அங்கமாக பாடசாலை மாணவ மாணவிகளின் திறமையால் வரையப்பட்ட ஒவியங்களை கொண்ட சித்திர கண்காட்சி இடம்பெற்றது.

இதற்காக பாடசாலையின் 3 ஆம் மற்றும் 4 ஆம் தரங்களை சேர்ந்த மாணவர்களது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சிக்கு ஓவியங்களை வரைந்த அனைத்து மாணவர்களுக்கும் HNB பினான்ஸ் ஊடாக பெறுமதியான சான்றிதழும் யாலு சேமிப்பு கணக்கொன்றும் ஆரம்பித்து வழங்கப்பட்டன. இதுதவிர பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை பை, அப்பியாச கொப்பிகள் உட்பட பரிசுளை வழங்குவதற்கு HNB பினான்ஸ் நடவடிக்கை எடுத்தது.

HNB பினான்ஸ் ஊடாக செப்டம்பர் 20 ஆம் திகதி நாகொல்லாகம ஸ்ரீ தம்மானந்த ஆரம்ப பாடசாலையில் விசேட சித்திர செயலமர்வொன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செயலமர்வை சித்திர ஆலோசகர் தயாவன்ச குமசாரு வழிநடத்தினார்.

இதன்போது பிள்ளைகள் வரைந்த ஓவியங்களுக்கான வர்ண பயன்பாடு, அவற்றை எவ்வாறு மேலும் மெருகூட்டுவது போன்ற வழிகாட்டல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு HNB பினான்ஸ் பாடசாலையில் மர நடுகை செயற்திட்டமொன்றையும் ஆரம்பித்தது. இதன்போது பெறுமதி வாய்ந்த மரங்கள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன.

HNB பினான்ஸின் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் “ பிள்ளைகளுக்கு சிறந்தவற்றை வழங்குவோம் என்ற கருத்து சமூகம் எங்கும் நிலவுகின்றது. எனினும் இது யதார்த்தமாக அமையாதது ஏன் என தேடிப்பார்க்க வேண்டியது எம் அனைவரினதும் சமூக பொறுப்பாகும். சமூக கூட்டுப்பொறுப்பை நிறைவேற்றும்போது அந்த செயற்திட்டம் ஊடாக சமூகத்துக்கு உண்மையாகவே ஏதாவது நன்மை உள்ளதா என்பது தொடர்பாக கவனம் செலுத்தும் நிதி நிறுவனமே நாம். மனிதர்களது அடிப்படை தேவைகளை சந்திப்பதில் எமது சமூக செயற்திட்டம் ஊடாக நிதி ஒதுக்கியுள்ளோம்.

வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைக்க, குடிநீர் செயற்திட்டங்கள், சுற்றாடல் மற்றும் நர நடுகை செயற்திட்டங்கள். கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு மற்றும் கல்வி நிலையை அதிகரிக்கும் செயற்திட்டங்கள் ஊடாக மக்களின் தேவைகளை நாம் சரியாக அறிந்துள்ளோம் என்பதற்கு சான்றாகும். அனைத்து வருடங்களிலும் சர்வதேச சிறுவர் தினத்துக்கு இணையாக HNB பினான்ஸ் சிறுவர்களின் திறமைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது. அதுதவிர பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பௌதீக வளங்களை வழங்குகின்றது. இந்த செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்” என கூறினார்.

HNB Finance நிறுவனம் 2011 இலக்கம் 42 கீழ் நிதி நிறுவன சட்டம் ஊடாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நித்துறையில் சர்வதேச விருதை வென்ற HNB Finance நிறுவனம் 48 கிளைகள் மற்றும் 22 சேவை நிலையங்களை ஊடாக நிதி சேவையை வழங்குகின்றது. இதுதவிர சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கான நிதி வசதிகளை வழங்கி நாட்டின் பொருளாதரத்துக்கு பங்களிப்பை வழங்குகின்றது. இதுதவிர HNB இன் 715 ATM இயந்திரங்கள் ஊடாகவும் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Hot Topics

Related Articles