உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை வென்று வெற்றியைக் கொண்டாடும் ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம்

இலங்கையின் முதன்மையான சுகாதார சேவையை வழங்கும் முன்னணி நிறுவனமான ஹேமாஸ் மருத்துவமனை நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான பல விருதுகளை அண்மையில் வென்றுள்ளதன் மூலம் இலங்கையின் அதிகமான விருதுகளை வென்ற மருத்துவமனை என்ற இடத்தைப் பெற்றதை கொண்டாடும் முகமாக விசேட அதிதிகள் பலருடைய தலைமையில் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஷெங்கிரிலா ஹோட்டலில் “செத்காரயா” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இடம்பெற்றது.


ஹேமாஸ் மருத்துவமனை கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக 18 முன்னணி விருதுகளை வென்று இலங்கையில் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவனை என்ற இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த விருதுகளில் சிங்கப்பூர் எல்த் கெயார் ஏஷியா என்ற 3 விருதுகளும்ரூபவ் வியட்நாம் ஹனோயில் இடம்பெற்ற வைத்தியசாலை முகாமைத்துவ ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் விசேட விருதும் உள்ளடங்கும். அத்துடன் இந்த வருடம் பிரதான சர்வதேச விருதைப் பெற்ற ஒரே மருத்துவமனை என்ற பெயரைப் பெற்று இலங்கைக்கு மாபெரும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்துடன் உள்நாட்டு ரீதியாக தொழில் பாதுகாப்பு மற்றும் ஆராக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் (NIOS) 3 விருதுகளும்ரூபவ் தரம் மற்றும் உற்பத்தித்திறனுக்கான தேசிய மாநாடு (Nஊஞீ) 9 தங்க விருதுகளும் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளது.

ஹேமாஸ் வைத்தியசாலையின் “செத்காரயா” விருது பெற்றதை கொண்டாடும் முகமாக அன்றைய இரவு பல்வேறு விசேட அதிதிகள் கலந்துகொண்டதோடு இலங்கை அங்கீகார சபையின் தலைவர் பேராசிரியர் அத்துல பெரேரா இலங்கை அங்கீகார சபையின் பணிப்பாளர் நாயகம் சந்திரிக்கா திலக்கரத்ன, இலங்கை தர நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் / பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி சித்திகா ஜீ சேனாரத்ன தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்திற்கான சங்கத்தின் தலைவர் பெனட் கம்லத் தேசிய தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிர்மலி சம்பிக்கா அமரசிங்க, ஈகோவிஸ் லிமிட்டெட் மற்றும் RKCA நிறுவனத்தின் பணிப்பாளர் திராஜ் ரனி, சிறுநீரக நோய் தொடர்பான நிபுணர் வைத்தியர் சிந்தக்க கலஹிட்டியாவ, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் ஹென்டர்ப், ஹேமாஸ் வைத்தியசாலை குழுமத்தின் தலைவர் முர்டஸா யூசுஹெலி, ஹேமாஸ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி, லக்கித் பீரிஸ் மற்றும் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தனியார் சுகாதார பிரிவு அபிவிருத்தி பணிப்பாளர், மஹரகம அபேக்ஷா வைத்திசயாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க உட்பட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விசேட அதிதிகள் பலர் கருத்து தெரிவிக்கையில் விசேடமாக வைத்தியசாலையொன்றில் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள்ரூபவ் சிறந்த தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்ததோடுரூபவ் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தியமை தொடர்பில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இந்த நாட்டிலுள்ள உயர்மட்ட தொழில் அங்கீகார நிறுவனங்களில் உள்ள ஆற்றல் மிக்க பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையானது சிறந்த சுகாதார சேவையை வழங்கும் ஹேமாஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹேமாஸ் வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் தனியார் வைத்திசயாலை மற்றும் தாதியர் விடுதிகள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ்ரூபவ் “ஹேமாஸ் நிறுவனத்தின் சேவைகள் எப்போதும் தரமானவை நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் ஆச்சரியம் மிக்க சிறந்த சேவையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. தரமான சுகாதார பாதுகாப்பு கொண்ட சேவையை வழங்குவதை மேம்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கையின் மக்களின் நலனுக்காகவும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தேவையான விலைமதிப்பற்ற வரையறைகளை அமைத்துள்ளது, நாங்கள் மாற்ற முகவராக இருந்தோம், இந்த நாட்டின் சுகாதார நிலப்பரப்பை தொடர்ந்து மாற்றுவோம்.” என தெரிவித்தார்.

இவை அனைத்தும் ஹேமாஸ் வைத்தியசாலை மூலம் எடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களும் ஹேமாஸ் மருத்துவனைகளால் மேற்கொள்ளப்பட்ட முன்னுரிமைகளாகும். அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த சுகாதார சேவையொன்றை பெற்றுக் கொடுத்தல், சர்வதேச அங்கீகாரத்தின் தங்க முத்திரையாகக் கருதப்படும் சர்வதேச சுகாதார தரம் கொண்ட அவுஸ்திரேலிய கவுன்ஸிலினால் (ACHSI) சர்வதேச தரத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஒரு வழியாக அமைந்துள்ளது.
மேலும் மருத்துவமனையின் சங்கிலித் தொடரில் சுகாதார சேவை தொடர்பான தகவல்களை ஹேமாஸ் App மற்றும் Livetrack போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சேவை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தரத்தினை மேம்படுத்துவதற்காக மட்டுமன்றி இரசாயனக் கூடங்களின் சிறந்த தன்மையை பராமரிப்பதற்காக LEAN மற்றும் 5S ஆகிய திட்டங்கள் உட்பட சிறந்த மற்றும் துரிதத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் பல்வேறு வேலைத் திட்டங்கள் குழுமத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறைந்த சலுகைகளைப் பெறும் சமூகங்களுக்கு மகத்தான நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஏறாளமான திட்டங்களை ஹேமாஸ் மருத்துவமனை முன்னெடுத்துள்ளது. இந்த வேலைத் திட்டங்களின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதோடு “சுவதென” வேலைத் திட்டத்தின் மூலம் சுகாதார விழிப்புணர்வு வேலைத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் பாடசாலைகளுக்கான முதலுதவி மற்றும் சுகாதார விழிப்புணர்வு “சுவசிசு” வேலைத் திட்டம்ரூபவ் வைத்தியர்களுக்காக வைத்திய கல்வி வேலைத்திட்டமான Meducate வேலைத்திட்டம் போன்றவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் “டெங்கு வேண்டாம்” என்ற வேலைத் திட்டம்ரூபவ் தொழில் வழிகாட்டுதல் திட்டமான “சிப்ஹலென் எயா” வேலைத் திட்டமும் மக்கள் மத்தியில் மிகவும் கௌரவமான இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “பியவர” வேலைத் திட்டத்தின் ஊடாக இலங்கை முழுவதிலுமுள்ள 60க்கும் அதிகமான ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக பாரிய பங்களிப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கும் 650 மில்லியன் ரூபா பொறுப்பேற்று றாகமை மருத்துவ பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள ஒரேயொரு தேசிய மத்திய நிலையமானது இவ்வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தில் முதலாவது வத்தளையிலும் இரண்டாவதாக தலவத்துகொடையிலும் அமைக்கப்பட்டன. இலங்கையில் சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்கும் மருத்துவமனையான ஹேமாஸ் மருத்துவமனை, அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதுடன் நாடு முழுவதிலும் இரசாயன ஆய்வுக்கூட கட்டமைப்பையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *