உலகம்

ஆரோக்கியா ஃபாம் நிறுவனத்துக்கு மஹாவெலி தொழில்முயற்சியாண்மை ஜனாதிபதி விருது

உயர் தரம் வாய்ந்த பசுமையான சுவை நிறைந்த மற்றும் போஷாக்கான முட்டைகளை இலங்கைச் சந்தைக்கு விநியோகிக்கும் நோக்குடன் இயங்கி வரும் ஆரோக்கியா ஃபாம் பிரைவட் லிமிடெட் அண்மையில் இடம்பெற்ற மஹாவெலி தொழில்முயற்சியாண்மை ஜனாதிபதி விருதுகள் 2019 நிகழ்வில் “கால்நடை பிரிவு” (பாரியளவு) இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.


இந்த நிகழ்வு ஒக்டோபர் 1ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வினூடாக துறையின் வளத்துக்காக சிறப்பாக பங்களிப்பு வழங்கியிருந்த நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் மஹாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஆரோக்கியா ஃபாம் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினால் “ஆரோக்கியா” வர்த்தக நாமத்தில் கால்நடை உற்பத்திகள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன. நலன்ரூபவ் ஆரோக்கியம் மற்றும் உறுதியான உளநிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த உற்பத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனது முழு உற்பத்தி செயன்முறையிலும் இந்த கொள்கையை நிறுவனம் பின்பற்றிய வண்ணமுள்ளது. நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் முட்டைகள் GMP சான்றிதழை பெற்றதுடன் தரத்தை பேணுவதற்காக இலங்கை தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) ஆலோசனைகளை பெற்றுக் கொள்கின்றது.

ஆரோக்கியா ஃபாம் பிரைவட் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசாஹிம் அலி கருத்துத் தெரிவிக்கையில் “பெருமைக்குரிய மஹாவெலி தொழில்முயற்சியாண்மை சனாதிபதி விருதுகள் 2019 நிகழ்வில் விருதை வென்றுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நிறுவனம் பல தடைகளை கடந்து இயங்கி வருவதுடன் குறுகிய காலப்பகுதியில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற நாமமாக வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது பயணம் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விரிவாக்கமடைவது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றோம். இதனூடாக இலங்கையின் பெருமளவு பகுதிகளுக்கு எமது தயாரிப்புகள் சென்றடையச் செய்வதை எதிர்பார்ப்பதுடன், எமது முட்டைகளின் போஷாக்கு உள்ளம்சத்தை மேம்படுத்தி பேணுவதிலும் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.

முட்டைகளில் Omega 3+ DHA போஷாக்கு அடங்கியுள்ளது. இலங்கையில் இந்த வகை முட்டைகளை உற்பத்தி செய்வதற்காக ஆரோக்கியா ஃபாம் காப்புரிமை பத்திரத்தைக் கொண்டுள்ளது. இதற்காக பறவைகளுக்கு Omega 3+ DHA போஷாக்கு சேர்ந்த தீனியை வழங்குவதுடன் இது 100 சதவீதம் இயற்கையான செயன்முறையாகும். உலகளாவிய ரீதியில் உறுதி செய்யப்பட்ட சுகாதார அனுகூலங்களை வழங்குகின்றது. குறிப்பாக இருதய குறைபாடுகள் ஏற்படுவதை குறைக்கின்றது மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கின்றது.

உடற் பயிற்சிகளின் பின்னர் தசைகள் மீட்சியடைவதற்கு உதவுவதுடன்ரூபவ் குருதி அழுத்தத்தையும் குறைத்துரூபவ் குருதிச் சுற்றோட்டத்துக்கு பங்களிப்பு வழங்குகின்றது. மூளை மற்றும் கண்களில் காணப்படும் கலன்களுக்கு ஊக்கமூட்டுவதுடன் இளவயதில் முதிர்ச்சியான தோற்றமடைதல் மற்றும் சூரிய கதிர்களால் சருமம் பாதிப்படைதல் போன்றவற்றிலிருந்து சருமத்தை ஆரோக்கியமாக பேணுவதிலும் பங்களிப்பு வழங்குகின்றது.

2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரோக்கியா ஃபாம் பிரைவட் லிமிடெட், தனது ஆறு வருட பூர்த்தியை இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடுகின்றது. தனது கோழிகளின் ஆரோக்கியத்தில் நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், சிறந்த திறந்த மற்றும் நல் ஒழுக்கமான விதிமுறைகளை பின்பற்றுகின்றது. 0766906866 அல்லது 0112932832 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, தமக்கு பிடித்த ஆரோக்கியா முட்டைகளை வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடங்களுக்கு தருவித்துக் கொள்ள முடியும்.

Hot Topics

Related Articles