உலகம்

9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு

நெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேரை மீட்ட பொலிஸார் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் ருய்னர்வோல்ட் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவர் நீளமான தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் காட்டுவாசி போல இருந்தார். மேலும் அவர் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டார்.

அவர் மதுபான விடுதியில் இருந்தவர்களிடம், தான் கடந்த 9 ஆண்டுகளாக வெளியுலகத்தை பார்க்கவில்லை என்றும் பண்ணை வீட்டின் பாதாள அறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி உதவி கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு அவர் தெரிவித்த முகவரிக்கு சென்றனர். அங்கு வயல்வெளிக்கு மத்தியில் பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த பண்ணை வீட்டில் நுழைந்து பொலிஸார் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் அடித்தளத்தில் இருந்த ஒரு பாதாள அறையில் முதியவர் ஒருவரும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட அவரது 5 மகன்களும் இருந்தனர்.

மதுபான விடுதிக்கு வந்தது முதியவரின் மூத்த மகன் என தெரிந்தது. இவர்கள் 7 பேரும் பண்ணையில் விளைந்த காய்கறிகள் மற்றும் ஆட்டு இறைச்சியை மட்டுமே சாப்பிட்டு 9 ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 58 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், 7 பேரும் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Hot Topics

Related Articles