இன்றைய திகதியில் எம்மில் பலர்  தங்களின் உடல் எடையைகுறைப்பதற்காகபலவித முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் உடல் எடையை சீராக பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன.இந்நிலையில் உடல்எடையை குறைப்பதற்கும், குறைத்துக் கொண்ட உடல்எடையை பராமரிப்பதற்கும் தற்போது கலோரி டயட் என்ற உணவு முறை அறிமுகமாகியிருக்கிறது.

கலோரி என்பது ஒவ்வொருவருக்கும் நாளாந்த தேவைப்படும் சக்தியின் அளவீடு ஆகும். ஒருவருக்கு அவரின் பணியின் தன்மையைப் பொறுத்து கலோரிகளின் அளவுநிர்ணயிக்கப்படுகிறது இவ்விடயத்தில் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையைஏற்றுக்கொள்ளவேண்டும்.

தற்போதிருக்கும் உடல் எடையைபத்து தினங்களுக்குள் குறைக்கவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 900 கலோரி சக்தி கொண்ட உணவினைஎடுத்துக்கொண்டால் போதும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வகையில், காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீர் அல்லது ஒரு கோப்பை கிரீன் டீ, காலை 9 மணிக்குள் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவாக வெஜ் சாலட் அல்லது ஃபுருட் சாலட்டை எடுத்துக் கொள்ளவேண்டும்.

சாலட்டுடன் இரண்டு ஸ்பூன் தயிர், கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள்,தேவையான அளவு உப்பு இதனை நன்றாக கலந்து காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவாக பழங்களை எடுக்கும்பொழுது வாழைப்பழத்தையும், காய்கறிகளில் உருளைக்கிழங்கையும் தவிர்க்கலாம். 11 மணி அளவில் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம்.

வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து கோப்பியோ அல்லது தேநீரோ சாப்பிடலாம். மதிய உணவாக சாதத்தை எடுத்துக் கொள்ளாமல், இரண்டு சப்பாத்தி, அல்லது 2 சப்பாத்தியுடன் இரண்டு துண்டு வேகவைத்த கோழி இறைச்சியையும் சாப்பிடலாம்.

முட்டை பிடிக்கும் என்றால் அவித்த முட்டையை ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆட்டிறைச்சியைத் தவிர்த்துவிடவேண்டும்.  நான்கு மணிக்கு கிரீன் டீ குடிக்கலாம் அல்லது வெள்ளை சர்க்கரை கலக்காத பானத்தை பருகலாம்.

மாலை ஆறு மணி முதல் ஆறு முப்பது மணிக்குள் கொண்டகடலை, பச்சைப்பயிறு, காராமணி போன்றவற்றை சாப்பிடலாம். இரவு நேரத்தில் பசித்தால் 8 மணிக்கு 9 மணிக்குள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். தொடர்ந்து பத்து நாட்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றினால் உங்களின் எடை ஐந்து கிலோ முதல் எட்டு கிலோ வரை குறையும்.

குறைத்துக் கொண்ட உடல் எடையை பராமரிக்கவேண்டும் என்றால் நாளாந்தம் முப்பது நிமிட நடைபயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகியவற்றை தொடரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here